Month: நவம்பர் 2017

கொரிய குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வெளியிடும் ஒன்றிணைந்த அறிக்கை 2017 நவம்பர் 29 ஆம் திகதி, சியோல் நகரில்

1. இலங்கை மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நவம்பர் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கொரியாவிற்கான அரச முறை விஜயமொன்றிணை மேற்கொண்டுள்ளார். நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற அரச தலைவர்களின் சந்திப்பு மற்றும் விசேட இராப்போசன விருந்தின் போது தமது நட்பினை பலப்படுத்திக்கொண்ட இருநாட்டு…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்து இன்று (30) காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அம்மக்களை இடர்நிலைமைகளில் இருந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முப்படையினரை…

தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டு

தேசிய நல்லிணக்கம், மீள்கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் முன்னேற்றப் பணிகளுக்கு கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  கொரியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக்குழு பிரதிநிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று மாலை சியோலில் ஜனாதிபதி அவர்கள் தங்கியுள்ள கிரேண்ட் ஹயாட் ஹோட்டலில் சந்தித்தனர். சர்வதேச மன்றங்களில் குறிப்பாக கொரிய நெருக்கடியின்போது இலங்கை கொரியாவுக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புக்கு அவர்கள் ஜனாதிபதிக்கு…

கொரியா – இலங்கை நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி

கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் அவர்களும் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் உறுதி பூண்டுள்ளனர். தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் தென் கொரிய ஜனாதிபதி மூன் அவர்களினால் நேற்று இரவு (29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்ட இராப் போசன விருந்தின் போதே இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உறுதிமொழியை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கொரிய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான…

இலங்கை ஜனாதிபதிக்கு சியோல் நகரின் கௌரவ குடியுரிமை

தென்கொரியாவிற்கு மூன்று நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு சியோல் பெருநகரின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சியோல் பெருநகர மேயர் பார்க் வொன் சூன் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி அவர்களுக்கு இந்த கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு கொழும்புக்கும் சியோலுக்குமிடையில் இரட்டை நகர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அவர்களை சந்தித்ததை…

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சியோலில் (SEOUL) இடம்பெற்ற வெற்றிகரமான வர்த்தக மன்றம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்கேற்புடன் மிகவும் வெற்றிகரமானதொரு வர்த்தக மன்றம் இன்று (29) தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கொரிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்காசிய பிராந்திய முன்னணி கம்பனிகளின் சில உள்நாட்டுப் பிரதிநிதிகள் இவ்வர்த்தக மன்றத்தில் பங்குபற்றினர். சியோலில் உள்ள ஹயாத் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 20 முன்னணி இலங்கை வர்த்தக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த வர்த்தக மன்றத்தில் தென்கொரியாவின் KBIZ, KCCI, KITA, FKI மற்றும் AHPEK…

தென் கொரிய இராணுவ நினைவுத் தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்களின் அழைப்பை ஏற்று தென்கொரியாவிற்கான மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இன்று (29) முற்பகல்  சியோல் நகரில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த தென் கொரிய இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவுத் தூபியானது சியோல் நகரின் தேசிய மயான பூமியில் அமைந்துள்ளது. நினைவுத் தூபி அமைந்துள்ள…

இன்று ஆரம்பமாகும் இலங்கை தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் – தென்கொரிய ஜனாதிபதி

தென் கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 வருடங்கள் நிறைவுபெறும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தென்கொரிய விஜயம் இரு நாடுகளுக்கிடையேயும் பலமான உறவை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையுமென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்கள் தெரிவித்தார். இன்று ஆரம்பமாகும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் தென்கொரிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தென் கொரியாவுக்கான அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி கௌரவ…

தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி

  நாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என  ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க தான் தயாராக இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் வலியுறுத்தினார். சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் (Nam San Hall)…

இலங்கை – தென்கொரிய ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கு முன்னரான எதிர்பாராச் சந்திப்பு

தென்கொரியாவிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி மீது தான் கொண்டுள்ள நன்மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களை இன்றே வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென்கொரிய ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் மூன்று நாள் அரசமுறை விஜயத்தின் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக…

NEW