Month: ஜனவரி 2018

ஜனாதிபதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்பு

யுத்தத்துக்கு பின்னரான பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத காரணத்தினால் யுத்தம் நிறைவு பெற்றபோதும் நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாகவில்லை என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (31) பிற்பகல் சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். யுத்தம் நிறைவு பெற்றபோதும் காணாமல் போதல்கள், படுகொலைகள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் செல்லுதல் என்பவை…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புத்தளம் மாவட்ட அமைப்பாளராக அசோக வடிகமங்காவ நியமனம்

வடமேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரான அசோக வடிகமங்காவ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (31) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

நல்லிணக்கமான தேசம் என்ற தனது கனவை நனவாக்குவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இனம், சமயம் என்ற பேதமின்றி அனைத்து மக்களும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்பவது தனது கனவாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இந்த கனவை நனவாக்குவதற்கு நாட்டை நேசிக்கும் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு தன்னை முழுமையாக அர்ப்பணிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இன்று (31) பிற்பகல் அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இனம், சமயம் என்ற பேதங்களின்றி இந்த…

குடும்ப ஆட்சியை நாட்டில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் – ஜனாதிபதி

தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்கால திட்டமும், கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றினை தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2015 ஜனவரி 08 ஆம் திகதி அப்போதிருந்த அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டமைக்கு அரசாங்கத்தில் காணப்பட்ட ஊழல், மோசடிகள்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி சம்பத் சுஜீவ ருவன்புர நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி சம்பத் சுஜீவ ருவன்புர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 2015 ஆம் ஆண்டில் ரத்கம தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக செயற்பட்ட சம்பத் சுஜீவ ருவன்புர, 2000 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரத்கம தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட செயலாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.…

ஜனாதிபதிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் மு்னனேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபவிருத்திக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், எதிர்காலத்திலும் கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் இத்தகைய பல்நோக்கத்…

முப்படையினரின் தொழிற் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு ஜனாதிபதி தலைமையில்

முப்படையினரதும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினதும் தொழிற்பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பொதுமக்களின் நிதியை பெருமளவில் சேமிக்கும் வகையில் மிக வினைத்திறனுடன் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவரும் தொழிற்பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் தற்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் இதன்போது ஜனாதிபதி…

நாட்டை துண்டாடவோ விற்பனைசெய்யவோ திட்டமிட்டவர்கள் நாங்களல்ல – ஜனாதிபதி

வரலாற்றில் இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவொரு அரசரோ அல்லது ஜனாதிபதியோ மேற்கொள்ளாத வகையில் நாட்டின் ஒரு பகுதியை வெளிநாடொன்றுக்கு உரிமை எழுதி வழங்க திட்டமிட்டவர்களே நாட்டை துண்டாடுவதாகவும் நாட்டை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியதாகும் என்று ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கொழும்பு​ துறைமுக நகரத்திற்கு 240 ஏக்கர் காணியுரிமையை சீனாவுக்கு வழங்க திட்டமிட்டமை பற்றியும், கொழும்பு இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள 6 ஏக்கர் காணியை சங்ரில்லா ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியமையும்…

சிறுமி அமானி ராயிதாவின் வேண்டுகோளை ஏற்று அவரது பதுளை இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.  எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்திக்கக் கிடைக்குமென்று அச்சிறுமியோ சிறுமியின் பெற்றோரோ சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை. ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் சிறுமியொருவர் தன்னைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி அச்சிறுமியை தன்னிடம் அழைத்து பேசி மகிழ்ந்தார்.…

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல்…

NEW