Month: பிப்ரவரி 2018

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான 100 கடன் திட்டங்கள்

தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலுவூட்டும் இணைந்த 100 கடன் முன்மொழிவுத்திட்டங்களை உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்றை இன்னும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். அரச வங்கிகளின் தலைவர்களுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார். தேசிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில்…

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆன்மீக பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிபெறச்செய்வது சவால் நிறைந்தது என்றபோதும் பல்வேறு துறைகளினூடாக அதற்கு ஊக்கமளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார். நல்லிணக்கம், சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியீடு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட ‘மூவர்’ திரைப்பட வெளியீடு…

தேசிய நிர்மாண விருது விழா 2017 ஜனாதிபதி தலைமையில்

தேசிய நிர்மாண கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கான சிறந்த பங்களிப்புகளை பாராட்டும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ‘தேசிய நிர்மாண விருது விழா 2017’ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிர்மாணத் துறையில் சிறந்து விளங்கிய 8 பேர்களுக்கான விசேட விருதுகளை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார். தேசிய ஒப்பந்தக்காரர்களினால் வெளிநாட்டு கருத்திட்ட நிர்மாணப் பணிகளை ஊக்குவித்து, பாராட்டுவதற்காக இம்முறை சேர்த்துக்கொள்ளப்பட்ட 3…

உலர் வலயத்தில் உள்ள 2400 சிறிய குளங்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

உலர் வலயத்தில் உள்ள 2400 சிறிய குளங்களின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கு தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரட்சியான காலநிலையில் விவசாய சமூகத்திற்கு கஷ்டங்களின்றி தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இக்குளங்களின் புனரமைப்பு பணிகளை விரைவாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (26) முற்பகல் தமன்கடுவை பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை…

ஜோன் டி சில்வா கலையரங்கின் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

மேடை நாடகங்கள் உள்ளிட்ட கலை படைப்புக்களை நியாயமான விலையில் மேடையேற்றுவதற்கான மண்டப வசதிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் கொழும்பில் உள்ள ஜோன் டி சில்வா கலையரங்கை கலைஞர்களினதும், கலை ஆர்வம்கொண்ட ரசிகர்களினதும் தேவையை கருத்திற்கொண்டு பொருத்தமான முறையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இக்கலையரங்கத்தை தனியார் துறையினருக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கலைஞர்களுக்கு மத்தியில் பேசப்பட்டு வந்ததுடன்,…

ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி விசேட அனுதாபக் குறிப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளரும், ஐ நா அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதியுமான ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட அனுதாபக் குறிப்பொன்றை பதிவு செய்தார். இன்று (25) பிற்பகல் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றை பதிவு செய்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொலைநோக்கு குறித்து சிறந்த  தெளிவுடன் இலங்கையில் செயற்பட்ட…

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்…

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஆறு புதிய அமைச்சர்களும் மூன்று இராஜாங்க அமைச்சர்களும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு அமைச்சரவை அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க     – சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சர் லக்ஷ்மன்  கிரியெல்ல – அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசிம் –…

ஐ  நா பிரதிநிதி ஊனா மெக்கோலியின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிட பிரதிநிதியுமான ஊனா மொக்கோலியின் மறைவுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டேரஸ் அவர்களுக்கு அனுதாபச் செய்தயொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், ஊனா மொக்கோலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொலைநோக்கு குறித்து நன்கு அறிந்திருந்ததுடன், இலங்கையில் செயற்பட்ட திறமைவாய்ந்த துறைசார் அதிகாரியாவார் என்று தெரிவித்துள்ளார். ஊனா மெக்கோலி…

மனந்தெளிநிலை (Mindfulness) தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (23) பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. சதி பாசல மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாடு இன்று முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும். செய்கின்ற பணியில் உள்ளத்தை ஈடுபடுத்தி அப்போதைய நிலையில் பிரக்ஞைபூர்வமாக உணர்வை பேணுவது உளந்தெளிநிலை என வரைவிலக்கணப்படுத்தப்படுவதுடன், அதனை பாடசாலை பிள்ளைகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.…

“கிராமங்களை உருவாக்குவோம்” கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டம் ஜனாதிபதி தலைமையில்

கிராமங்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறைந்த வருமானங்களை உடைய மக்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் உட்படுதலே கிராமங்களில் வறுமை நிலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். எனவே இந்த சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல் அவசியம் என்பதுடன், சகல துறைகளின் பங்களிப்புடன் அரசாங்கம் தற்போது இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (23)…

NEW