Month: மார்ச் 2018

இளைஞர்  சமூகத்துக்கு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் கூட்டாக பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் இளைஞர் சமூகத்துக்கு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (31) பிற்பகல் நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற ”தேசிய யொவுன் புர 2018” நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் சபையும் தேசிய இளைஞர் பேரவையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் யொவுன் புர 2018ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி குருநாகலை மாவட்டத்தை மையமாகக்கொண்டு கடந்த 28ஆம்…

சார்க் நாடுகளின் தொற்றாத நோய்கள் தொடர்பான முதலாவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்

சார்க் நாடுகளின் தொற்றாத நோய்கள் தொடர்பான முதலாவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமானது. தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள் குறித்தும் சார்க் நாடுகளுக்கிடையே அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல் தொடர்பாக இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளதுடன், இம்மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறுகின்றது. மரபணு, உடல் மற்றும் சுற்றாடல் காரணிகளின் காரணமாக உருவாகும் நோய்…

காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் அனைவருக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டு மக்களின் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் கட்சி பேதமின்றி அனைவருக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இதனை மக்களுக்காக நடைமுறைப்படுத்தும் போது பணத்திற்கு முக்கியத்துவமளித்து மோசடிகள் இடமபெறுமாயின் அரசாங்கம் என்ற வகையில் காணி தொடர்பில் எத்தகைய கொள்கையை பின்பற்றினாலும் பயனில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாய சமூகத்தினருக்கு சட்ட ரீதியான காணி உரிமைகளை வழங்கும் நிகழ்வு இன்று (30) பிற்பகல் பொலன்னறுவை றோயல்…

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்து

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார். உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையிலும் மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் அதன்மூலம் பாதிக்கப்படுவது மக்களேயாவர் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார் இன்று (30) பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எந்தவொரு அரசாங்கமும் அரசியல்வாதியும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டின்…

பொலன்னறுவை மாவட்ட தொழில் அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலன்னறுவை மாவட்ட தொழில் அலுவலகம் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. சகல வசதிகளையும் கொண்ட இந்த மூன்று மாடி தொழில் அலுவலகம், பொலன்னறுவை கதுருவெல நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான மொத்தச் செலவு 158 மில்லியன் ரூபாவாகும். பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 3,000த்திற்கும் அதிகமான பல்வேறு நிறுவனங்களில் தொழில்புரியும் 50,000க்கு அதிகமானோர் இந்த புதிய அலுவலகத்தின் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய…

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்…

நிர்மாணத் துறை மூலப்பொருட்களான கல், மண் மற்றும் மணல் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தை ஒரேயிடத்தில் வழங்குவதற்கான முறையொன்றினை விரைவில் தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்களர் ஆலோசனை வழங்கியுள்ளார். நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்ட ஆலோசனையினை வழங்கினார். கல், மண், மற்றும் மணல் ஆகியவற்றுக்கான அனுமதிப் பத்த்திரங்கள் வழங்குவதை அரசாங்கம்…

பொலன்னறுவை மாவட்ட விவசாய சமூகத்திற்கு சட்ட ரீதியான காணி உறுதிகள்

விவசாய சமூகத்தினர் நீண்ட காலமாக பயன்படுத்திவரும் காணிகளின் சட்ட ரீதியான உரிமையை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் காணிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள விவசாய சமூகத்தினருக்கு 1053 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (30) முற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெறும். தமன்கடுவ, லங்காபுர, பொலன்னறுவை, எலகர மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள…

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் நாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணித்ததுடன் அமைச்சின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் காலங்களுக்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களை…

ஜனாதிபதி ரஷ்ய தூதுவராலயத்திற்கு விஜயம்

ரஷ்யாவின் கெமரோவா நகரில் அமைந்துள்ள வர்த்தக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பலரின் இறப்பு தொடர்பில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இன்று (28) பிற்பகல் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு துயரமான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது…

பதில் கடமையாற்றும் உயர் நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்ரசிறி பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி அவர்கள், பதில் கடமையாற்றும் உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

NEW