Month: மே 2018

நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான  சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் கீர்த்திமிக்க…

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை நாட்டில் ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுவார்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (31) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். நீதித்துறையினர் மட்டுமன்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட…

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் ”ரன் தியவர” உறுதி வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி தலைமையில்

உணவு பாதுகாப்புடன் கூடிய சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை விவசாய சமூகத்தினர் பெருமையுடன் எழுந்திருக்கக்கூடிய  எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தமது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகளுக்கான உறுதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தை மேலும் சாத்தியப்படுத்தும் வகையில் மகாவலி பி, சீ மற்றும் ரம்புக்கன்ஓய வலயத்தின் 12,000 காணி உறுதிகளை வழங்கும் ”ரன் தியவர” காணி உறுதி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன…

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய்நாட்டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறித்த தெளிவுடன் அவர்கள் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (30) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த…

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதந்தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் இன்று (30) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவின் தலைவர் McClellen Thornberry, Enrique Cuellar, Vicky Hartzler, Carol Shea – Porter உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும்…

“சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் பொசன் மாத நிகழ்ச்சிகள் ஜனாதிபதி தலைமையில் 

“சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் பொசன் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) களனி பெத்தியாகொட பரமார்த்த தர்மாகர பிரிவெனா விகாரையில் இடம்பெற்றது. சங்கைக்குரிய கொரதொட வெஸ்ஸவபூ தேரரினால் சமய உரை நிகழ்த்தப்பட்டது. இன்று காலை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் சமய கிரியைகளில் கலந்துகொண்ட பின்னர் விகாராதிபதி சங்கைக்குரிய தொம்பே இந்திரசிறி நாயக்க தேரரை சந்தித்து, அவரது சுக துக்கங்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி…

நிர்வாக செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் இணையத்தள அங்குரார்ப்பணம் ஜனாதிபதி தலைமையில்

நிர்வாக செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் இணையத்தள அங்குரார்ப்பணம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒம்புட்ஸ்மன் அலுவலகம் கடந்த 37 வருடங்களாக பொது மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற போதிலும் அந்த அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளமும் இதுவரை இருக்கவில்லை. அக்குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போதைய நிர்வாக செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற ஆணையாளராக கடமையாற்றும் முன்னாள்…

தென் மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம்.

நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித…

“சில்ப அபிமானி 2017” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி தலைமையில்

நாட்டின் பேண்தகு தன்மையை உறுதிப்படுத்துவதற்காக சுதேச கைவினைத் துறையினைப் போஷித்து, பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் “சில்ப அபிமானி 2017” கைவினைத் தொழிற்துறை ஜனாதிபதி விருது விழா, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின தலைமையில் இன்று (28) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய மட்டத்தில் சிறந்த படைப்புக்களை உருவாக்கிய படைப்பாளர்களை பாராட்டுவதற்காக இந்த கைவினைத்…

வெள்ளப்பெருக்கினால் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி சிலாபம் விஜயம்

அதிகமழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (26) பிற்பகல் சிலாபத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மகாவெவ பிரதேச செயலகத்தில் பிரதேச அரசியல் பிரதிநிதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறிந்தார். இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், விபத்துக்குள்ளான…

NEW