Month: அக்டோபர் 2018

ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் சந்திப்பு

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். ஜனாதிபதி அவர்களின் தலைமையின்…

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அவர்கள் ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக…

துனேஷ் கன்கந்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்

துனேஷ் கன்கந்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சரவை செயலாளர்கள் நியமனம்

புதிதாக நியமிக்கப்பட்ட 12 அமைச்சரவை அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு திரு.ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு  அமைச்சு   திரு.டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்க –             மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்                                                                         திரு. ஆர்.பீ.ஆரியசிங்க –             வெளிநாட்டலுவல்கள் அமைச்சு   திரு. எல்.பீ.ஜயம்பதி                 –             துறைமுகங்கள் மற்றும்…

அரச நிறுவனங்களினுள் அமைதி பேணப்பட வேண்டும் – தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளுக்கு இடமளிக்காது அமைதியை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். கடந்த சில தினங்களில் சில அரசாங்க நிறுவனங்களினுள் ஏற்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சர்வதேச ரீதியாக நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய…

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பிரதமர் ஒருவரை தெரிவுசெய்யும் தீர்மானத்திற்கு காரணமாக அமைந்த முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்குரிய நிலைமைகளை இதன்போது ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களுக்கு விளக்கி கூறினார். இங்கு கருத்து தெரிவித்த வெளிநாட்டு தூதுவர்கள், நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப நாட்டினுள் அமைதியை பேணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம்…

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :- அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்                 அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான                                                                                                                 சேவைகள்…

வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (29) முற்பகல் திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், அரசியல் தலைமைத்துவமும் வழிகாட்டலுமின்றி இன்று ஆறு மாகாண சபைகளின் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். சுற்றுநிரூபங்கள் காரணமாக  அதிகாரிகளின் சேவைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் சிறந்த…

ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்.

தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்களும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமருக்கும் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். சமல்…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களைப் பற்றி மிக சுருக்கமான ஒரு தெளிவை முன்வைப்பதற்காகவாகும். இன்று நாம் ஒரு புதிய வருடப்…

NEW