Month: நவம்பர் 2018

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இன்று (30) பிற்பகல் கொழும்பு சுஹததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். சுமார் 27,000…

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது வருட நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

வெளிநாட்டு சிந்தனைகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் ஏற்ப செயற்பட்டு, ஜோன் டொய்லி முறைமைக்கு மீண்டும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முயற்சிக்கும் சில அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருடம் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்…

இலட்சக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வளம் சேர்க்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்  திறக்கப்பட்டன.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜரட்ட மக்களுக்காக கண்ட நீண்டகால கனவை நனவாக்கும் வகையில் அவரது முழுமையான கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட துரித மகாவலி திட்டத்தின் இறுதி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (30) முற்பகல் திறக்கப்பட்டன. நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முதன்முறையாக வான் கதவு மட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்றைய தினம் நீர்த்தேக்க வளாகத்தை பார்வையிட்டார். நான்கு தசாப்தங்களுக்கு…

“PMB Rice” முதலாவது பொதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் “PMB Rice” விற்பனை நாமத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அரிசி சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன் முதல் பொதியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதுடன், அப்பணிகள் நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களிலுள்ள 220 களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லினை தரமான…

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறக்கப்படவுள்ளன.

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. இந் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டு நாளை (30) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க திட்ட வளாகத்தை பார்வையிடவுள்ளார். ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதி அவர்களின் நீண்டகால கனவை நனவாக்கும் துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த…

அரச துறையினரின் சம்பள மீளாய்வுக்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது

அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரணுக்கே மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்ததுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இதன்போது வருகை தந்திருந்தனர். அரச துறையினரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சுற்றுநிரூபங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி அரச துறையினரின்…

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. “இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை” என்ற கருப்பொருளின் கீழ் இந்த சர்வதேச மாநாடு, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சியுடன் இணைந்ததாக நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு…

குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டதிட்டங்களுடன் துரித வேலைத்திட்டமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

சமூகத்தில் பாரிய சவால்களாக காணப்படும் குற்றங்கள், பாதாள உலகத்தினர் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய துரித வேலைத்திட்டம் தொடர்பாகவும் அதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்தி தேவையான அதிகாரங்களை அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாடு, குற்றங்களை குறைத்தல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற…

மின்சாரத்தினால் இயங்கும் ரேசிங் கார் ஒன்றினை நிர்மாணிக்கும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் பிரிவின் மாணவர்களால் ஜேர்மனியில் இடம்பெறும் “போமியுலா ஸ்டுடன்ட் 2019” மோட்டார் வாகன போட்டித் தொடரில் காட்சிப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் மின்சாரத்தினால் இயங்கும் ரேசிங் காரின் நிர்மாணப் பணிகளுக்காக 06 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைத்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக இடம்பெறும் இந்த போட்டித் தொடர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியின் ஹொக்கன்ஹியிம் (Hockenheim) நகரில் இடம்பெறுவதுடன்,…

சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது. தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில் சமய, கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தும் மாநாட்டிற்கான உபசரிப்பை இம்முறை இலங்கை வழங்கியுள்ளது. தேரவாத பௌத்த தத்துவம் எதிர்நோக்கும் சவால்களுக்கான வளமான தீர்வுகளை கண்டறிவதற்கு இம்மாநாடு மிகவும் முக்கியமானது…

NEW