Month: ஜூன் 2019

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும். இதன் பிரதான மாநாடு நாளை (01) பிற்பகல் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும். ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக…

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஆறாவது நாள் இன்று

இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் பாரிய சமூக அழிவுக்கு காரணமாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து தேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சர்வதேச தினத்துடன் இணைந்ததாக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆறாவது நாளான இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்கல்வி பெற்றுவரும் மாணவர்களை இலக்காகக்கொண்டு பொதுமக்களின்…

மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் ஊழல் சகாதார துறையில் பெரும் பிரச்சினையாகும் – ஜனாதிபதி   

மருந்துப் பொருட்களையும் நவீன மருத்துவ உபகரணங்களையும் கொள்வனவு செய்யும்போது அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்க்கிலும் பெரும் நிதி மோசடிகள் இடம்பெறுவது மேலைத்தேய மருத்துவ துறையிலுள்ள பெரும் பிரச்சினையாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய வாட்டுத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (28) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். மன்னம்பிட்டி கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து வந்த நீண்டகால…

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளும் வெற்றிகரமாக.

ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சர்வதேச தினத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாள் இன்றாகும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் போதைக்கு அடிமையானவர்களை விடுவிப்பதற்காக மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்று இன்று (28) முற்பகல் பொல்கஹவெல…

அமைதியும் ஒழுக்கப் பண்பாட்டையும் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் – ஜனாதிபதி   

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை, தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (28) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை…

எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்  – ஜனாதிபதி

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும் தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைத்து தரப்பினரும் போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் நபர்களாவர் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.…

தனது மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அம்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி   

தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்காது தமக்கு ஒதுக்கப்படும் நிதியினைக்கொண்டு மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (27) பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். பிரதேச அரசியல் தலைவர்கள், வெளிக்கள அதிகாரிகளுடன் இணைந்து கிராமிய மக்களின் பிரச்சினைகளை…

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று பாதுகாப்பு துறைகளின் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

போதையிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்கும் நோக்கில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று (27) பாதுகாப்பு துறையினரின் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு கால அட்டவணையை பிரகடனம் செய்யும் கிழக்கு மாகாண வேலைத்திட்டம் இன்று முற்பகல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா…

சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்ப போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும் – ஜனாதிபதி   

மக்கள் மத்தியில் வறுமை நிலை உயர்வடைவதற்கு போதைப்பொருள் பாவனையே முதன்மை காரணியாக காணப்படுவதுடன், சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகள் மிகவும் அவசியமாகும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை பெந்திவெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (27) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமை அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை முன்னிட்டு முழு இரவு பிரித் பாராயணம் மற்றும் சமய உரை நிகழ்வு நேற்று (26) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இந்த சமய உரை நிகழ்வில் பங்குபற்றினார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள்…

NEW