Day: November 5, 2019

திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

திரிபீடகத்தை உலக நினைவுப் பட்டியலில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இலங்கை பிக்கு பரம்பரையினரால் பேணிப் பாதுகாக்கப்பட்ட புத்த பகவானின் போதனைகளை உள்ளடக்கியுள்ள தேரவாத திரிபீடகம் ஜனாதிபதி அவர்களால் 2019 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி 2109/13 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானி அறிக்கை மூலம் இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2019 மார்ச் 23ஆம் திகதி…

ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துதல் மற்றும் கடவத்தை மகமாயா மகளிர் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்குடன்கூடிய புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

கம்பஹா மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹேனேகம மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது. சி.டப்ளியு.டப்ளியு.கன்னங்கராவின் இலவசக் கல்விக் கொள்கைக்கேற்ப உருவாக்கப்பட்ட 11வது மத்திய கல்லூரியான ஹேனேகம மத்திய கல்லூரி 1944ஆம் ஆண்டு 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக்கு பல்வேறு சிறந்த பிரஜைகளை வழங்கி ஆயிரக் கணக்கான மாணவர்களின் கல்விக்கு வழிவகுத்த புகழ்பெற்ற பாடசாலையாக இப் பாடசாலை விளங்குகிறது. இன்று முற்பகல் கல்லூரிக்கு…

இலங்கைப் பாடகர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு பாராட்டு

கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன்பேணலுக்காக கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் முன்னெடுத்த பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கைப் பாடகர்கள் சங்கம் ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கைப் பாடகர்களின் சங்கம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பொன்று நேற்று (04) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கடந்து ஐந்து வருட காலமாக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்கள் நாட்டின் கலைஞர்களுக்கு பெரும் சக்தியாக இருந்ததாக…

NEW