Day: November 8, 2019

நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “விதுலி புராணய” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். மின்சார சபையில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய…

“One Galle Face Tower” வர்த்தக கட்டிடத்தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

அபிவிருத்தியடைந்துவரும் கொழும்பு நகரில் பாரிய நவீன வர்த்தக கட்டிடத்தொகுதியான “One Galle Face Tower” ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (08) திறந்து வைக்கப்பட்டது. சங்கரில்லா குழுமத்திற்கு சொந்தமான இந்த நவீன வர்த்தக கட்டிடத்தொகுதி தங்குமிட வசதிகள், அலுவலகங்கள், உணவக வசதிகள், திரைப்படக் கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தை தரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 07 மாடிகளைக்கொண்ட இந்த வர்த்தக கட்டிடத்தொகுதி 480,000 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளதுடன், சுமார்…

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எதிர்பார்ப்புக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றிருப்பதாக திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபையின் தேரர்கள் தெரிவித்துள்ளனர்  தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தி யுனெஸ்கோ உலக ஞாபக பதிவேட்டில் உள்ளடக்குவது குறித்த ஊடகச் சந்திப்பொன்று நேற்று (08) அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே தேரர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.  திரிபீடகத்தை பாதுகாத்து அதனை தேசிய மரபுரிமையாக…

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் நாட்டின் பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும் – ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் எமது முப்படையினர் உட்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (08) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். புதிய இராணுவ தலைமையக வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்றார். மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ…

NEW