சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கெண்டபரி பேராயர் பாராட்டு

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கெண்டபரி பேராயர் பாராட்டு

இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை  நேற்று (29) இரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்ததுடன், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டினார்.

மிகுந்த மரியாதையுடன் பேராயரை வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், இலங்கை விஜயம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகுமென குறிப்பிட்டதோடு, அவரது வருகைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் பேராயருடன் மிக நெருங்கிய சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், நாட்டின் அனைத்து மதத்தினரிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்பி அனைத்து மதத்தினரின் வரப்பிரசாதங்களையும் உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டினார்.

சுமூக கலந்துரையாடலைத் தொடர்ந்து அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Share This Post

NEW