Archives

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி பங்குபற்றினார்

நாரஹேன்பிட்டி அபயராமவின் தலைமைத் தேரரும் மேல் மாகாண சங்க நாயக்கருமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு விசேட அன்னதான நிகழ்வு இன்று (26) அவ்விகாரையில் இடம்பெற்றது. மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பல வருடங்களாக பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்களுக்கு சுபீட்சமான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு…

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை

அடுத்த 48 மணித்தியாலங்களில் முதலாவது குழு நாட்டை வந்தடையும்… கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (WUHAN) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட…

வறுமையை ஒழித்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பீ.திவாரத்னவின் தலைமையிலான இச்செயலணி பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் அனுபவம் வாய்ந்த 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது. கடந்த காலங்களில் சுதேச பொருளாதாரத்தின் பலம் சர்வதேச மட்டத்தில் உரிய மதிப்பை பெறவில்லை. கிராமிய, தோட்ட மற்றும் நகரப் புறங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் திறன், இயலுமைகளைப்போன்றே பலவீனங்கள், சவால்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாததன் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள்…

சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும். கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad Sherida Al Kaabi) இன்று (26) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை அளித்தார். அண்மையில் நடந்த தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி அவர்களுக்கு…

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கென்றே அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையமான “ஆயத்தி“ தேசிய மத்திய நிலையம்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (25) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது அங்கவீனம் என்பது ஒரு தேசிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. ஐந்து சிறுவர்களில் ஒருவர் (20%) உடல் அல்லது உள குறைபாடுகளை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முற்கூட்டியே கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் அவர்களை சிறந்த முறையில் சமூகமயப்படுத்த முடியும். இதற்கு தீர்வொன்றை வழங்கும் வகையில்…

பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவாலாகும்   – ஜனாதிபதி தெரிவிப்பு

இலாப நோக்கற்ற அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வேண்டும். துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும் அரசாங்கத்திற்கு சுமையாக அமையாது இலாபமீட்டுவதும் நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தேசிய பொருளாதாரம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு நேரடி பங்களிப்பினை வழங்கும் அரச கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் மற்றும் நியதிச் சட்ட சபைகள்…

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைய வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பேண்தகு முதன்மை உபாயமார்க்கமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் அவர்களுக்கு அரச துறையில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…

உரிய நியமங்களை பூர்த்தி செய்யாத நெல் ஒரு கிலோகிராமிற்கு 44 ரூபா….. விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஒரே நாளில் பணம் வைப்பிலிடப்படும்….. குறித்த வங்கிக் கிளைகள் 07 நாட்களும் திறந்திருக்கும்….. செயற்பாட்டினை துரிதப்படுத்த முப்படையினரின் பங்களிப்பு…… வீழ்ச்சியடைந்துள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்த நடவடிக்கை…. 2019/20 பெரும்போகத்தின்போது அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறித்த நியமங்களை பூர்த்தி செய்த நெல்லிற்கான விற்பனை விலை கிலோகிராமிற்கு 50 ருபாவாக…

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்… தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி… பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு… மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரிதகதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

NEW