புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

       

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், புதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Share This Post