Category: Articles

புதிய சுவாசம்

உலகில் கண்கவர் வனப்புமிக்க ஒரு நாடு என்ற வகையிலேயே ஆதிகாலம் முதல் இலங்கை ஏனையோரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு எமது நாட்டின் அமைவிடம் மாத்திரமன்றி ஒரு தேசமாக நாம் பெற்றுள்ள உயரிய பெறுமானங்களும் காரணமாகும்.  எனினும் காலப்போக்கில் இலங்கையரின் தனித்துவ அடையாளத்திற்கு சவாலாக அமையக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை எமது நாடு எதிர்நோக்க நேர்ந்தது. சுற்றாடலுக்கு கூருணர்வு அற்ற சமூகமொன்று உருவாகி வந்தமையே இதற்கான முதன்மை காரணமாக அமைந்தது.  எமது மூதாதையர் இயற்கையுடன் மிக நெருங்கிய பிணைப்பினைக்…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (2019.11.16 கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து)

வணக்கம், கடவுள் துணை,  மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களே,  அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே, 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்னை வெற்றிபெற செய்வதற்காக எனக்கு வாக்களித்த சுமார் 62 இலட்சம் மக்களுக்கும் அன்று போலவே இன்றும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 2015 ஜனவரி 08ஆம் திகதி வெற்றிபெற்று 09ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் சில தினங்களில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் நாட்டு…

பொலன்னறுவை புராதன தொழிநுட்ப நூதனசாலையுடன் இணைந்த மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி திறந்து வைப்பு

பொலன்னறுவை புராதன தொழில்நுட்ப நூதானசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (12) பிற்பகல் திறந்துவைத்தார். புதிய யுகத்திற்கேற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன் தொடர்புடைய தொல்லியல் பொறுமதிவாய்ந்த பொருட்களை சேகரித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நூதனசாலை ஜனாதிபதி அவர்களால் கடந்த ஜூலை மாதம் 03 திகதி திறந்துவைக்கப்பட்டது. நூதனசாலையின்…

ஜனாதிபதியின் ஐந்து ஆண்டுகால சேவைக்கு மகாசங்கத்தினர் பாராட்டு

நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அழித்துக்கொண்டிருந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து சமூகத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆற்றப்பட்ட உன்னத பணிக்காக மகாசங்கத்தினர் அவருக்கு ஆசிகலந்த பாராட்டுகளை தெரிவிப்பதாக வண. அளுத்கம பஞ்ஞாசார தேரர் தெரிவித்தார். அப்பாவி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வளித்து ஆன்மீகத்தால் போஷிக்கப்பட்டு அறமிகு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவும், புனித திரிபீடகத்தை பாதுகாப்பது உள்ளிட்ட பௌத்த சாசனத்தின் நிலைபேற்றை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் இன்று போன்றே என்றென்றும் போற்றப்படும் என்றும் தெரிவித்தார்.…

ஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்

ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) பிற்பகல் டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க உள்ளிட்ட அந்நாட்டின் தூதுவராலய அதிகாரிகளும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், உலகத் தலைவர்கள்…

பௌத்த சாசன வரலாற்றில் பாரிய பங்காற்றிய பெருமை தற்போதைய ஜனாதிபதியையே சாரும

வண. பலங்கொட சோபித்த தேரர் பௌத்த சாசன வரலாற்றில் முக்கிய பங்காற்றிய பெருமை தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களையே சாருமென மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாவின் அதிபர் வண. பலங்கொட சோபித்த தேரர் தெரிவித்தார். பாணந்துறை, கொரக்கான, கதுருதூவ தர்மாஷிராம விகாரையின் சிறிசுகத அறநெறி பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் தலைமை உரையாற்றியபோதே தேரர் அவர்கள்…

சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு

நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.  பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Stef  Blok தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இம்முறை…

கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த சுமார் ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களினதும் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் வன அடர்த்தி குறைவடைந்துள்ளதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வன வளத்தை அதிகரிப்பதற்காக கடந்த நான்கு வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் காரணமாக நாட்டின் வன அடர்த்தி குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (12) முற்பகல் ஹபரண, கல்ஓயா பாதுகாப்பு வனப் பகுதியில் இடம்பெற்ற “வனரோபா” தேசிய மர நடுகைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு…

“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்

“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும். சுமார் 160 விகாரைகள் மற்றும் கோவில்களின்…

ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையின் தர்ம போதனை கட்டிடம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைப்பு

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சமய மறுமலர்ச்சியை நோக்காகக் கொண்டு ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தர்ம போதனை கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது. இன்று பிற்பகல் விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தர்ம போதனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதற்காக…

NEW