Category: உள்நாட்டுச் செய்திகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்தரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ்…

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 420 மில்லியனாக அதிகரிப்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள 1200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபா நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று…
கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு…
மெக்னிபிகா சொகுசு கப்பலில் சேவைசெய்த இலங்கை இளைஞரின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

உலகின் எந்தவொரு துறைமுகத்தினாலும் பொறுப்பேற்கப்படாத எம்.எஸ்.சீ. மெக்னிபிகா (MSC Magnifica) கப்பலில் சேவை செய்த ஒரேயொரு இலங்கை இளைஞரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடற் படையினர் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இக்கப்பலில்…

Ø  நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு…
கஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு

Ø  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டு Ø  நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த பரிசோதனை Ø  பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சேவைக்கு பாராட்டு Ø  இந்தியாவிலிருந்து பல்வேறு…
ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில்…
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக…
2961 கைதிகள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அவர்கள் சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதியின் செயலாளரிடம் முன்வைத்திருந்தது. தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் முறையாக முன்னெடுப்பு : அனைத்து தீர்மானங்களும் நிபுணர்களின் ஆலோசனையுடன்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான  கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார். நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடிதுயுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலைமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
NEW