ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா அம்மையாருக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், பிறந்துள்ள புத்தாண்டில் அவரது சகல செயற்பாடுகளும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா அம்மையார் பிரதிநிதித்துவம் செய்யும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதனூடாக பங்களாதேஷ் மக்கள் ஷேக் ஹசீனா அம்மையார்…
கௌரவ கரு ஜயசூரிய அவர்கள், சபாநாயகர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை. கௌரவ சபாநாயகர் அவர்களே, 2018 நவம்பர் 14 ஆம் திகதிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் அதன் இணைப்புகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்தினேன். முதலாவதாக பாராளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தங்களது செயற்பாடுகள் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள…
நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலிகொண்டதுடன், பாரிய பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ள கடந்த 28ஆம் திகதி இந்தோனேஷியாவின் மத்திய சுலாவெசி டெங்கா பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சகல இந்தோனேஷிய மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இந்தோனேஷிய ஜனாதிபதி ஜொகோ விடொடோவிற்கு ஜனாதிபதி அவர்கள் அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் இந்த அனர்த்தத்தினை கேள்வியுற்று தாம் அதிர்ச்சிக்கு உள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள சகல மக்களுக்கும்…