Category: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்

சிறுநீரக நோயின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்டெடுப்பதே எனது எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

நான் சுகாதார அமைச்சராக பணியாற்றியபோது மிகப் பெரும் சமூக அவலமாகவிருந்த சிறுநீரக நோயின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்டெடுப்பதே எனது முதன்மையான எதிர்பார்ப்பாக இருந்தது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் அப்பாவி மக்களை இவ்வனர்த்தத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு நான்…

நிலையான அபிவிருத்தியை சாத்தியப்படுத்த பெண்கள் வலுவூட்டப்படவேண்டியது அவசியமாகும் – சர்வதேச மகளிர் தினச் செய்தியில் ஜனாதிபதி

பெண்கள் பாதுகாப்பான தொழில்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதன் மூலமும் சமூக தலைமைத்துவ அந்தஸ்த்துகளை அவர்கள் அடைந்து கொள்வதற்குத் தடையாகவுள்ள சட்ட மற்றும் சமூக தடைகளை அகற்றி ஒரு அபிவிருத்தியடைந்த கல்வி மற்றும் தொழிற் திறன்களை அவர்களுக்கு வழங்குவதனூடாக மட்டுமே பெண்களை வலுவூட்ட முடியும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (08) இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்றைய நிலைமையை நாம் எடுத்து நோக்கினால் கடுமையான பொருளாதார…

சமய அநுஷ்டானங்கள் நன்நெறிகள் மீதான மனிதனது எல்லையற்ற பக்தியை வெளிப்படுத்துகிறது – மகா சிவராத்திரி தின செய்தியில் ஜனாதிபதி

மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயாசாரங்கள், அநுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை மற்றும் நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெறும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்ட நெடுங்காலமாக தொடர்ச்சியாக அநுஷ்டிக்கப்பட்டுவரும் இத்தகைய சமயப் பாரம்பரியங்கள் எப்போதும் மனிதனது அமைதியான சமாதானமான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளன என்றும் ஜனாதிபதி அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள…

சுதேச அறிவையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே எமது சுதந்திரத்தின் பலம் பெரிதும் தங்கியுள்ளது – சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி

கடந்த காலத்தின் பலமான சமூக, கலாசார மரபுரிமைகளை ஆர்வத்துடன் பாதுகாத்து எதிர்கால வெற்றிகளை நோக்கி  முன்னேறும் அதேநேரம், சுதேச அறிவையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே எமது சுதந்திரத்தின் பலம் பெரிதும் தங்கியுள்ளது என்பது எமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) கொண்டாடப்படும் இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப,…

இன்றைய பூகோல உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்தரும் ஒரு முக்கிய மூலமாக நபியவர்களின் “மதீனா சாசனம்“ விளங்குகிறது – மீலாத் செய்தியில் ஜனாதிபதி

இன்றைய பூகோல உலகில், பன்மைத்துவ சமூகத்திற்காக நபியவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘மதீனா சாசனம்’ நவீன உலகின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்தரும் ஒரு முக்கிய மூலமாகவுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,  அது கலாசார மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த குழுக்களுக்கிடையே முரண்பாடுகளைத் தவிர்த்து, தீர்வுகளை கண்டடைவதற்கான அணுகுமுறைகளை முன்வைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுத்திருக்கும் மீலாத் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சமயத்தில் பலவந்தம் பிரயோகிக்கப்படுவதை இஸ்லாம்…

இயேசுவின் தத்துவம் நித்தியமானதும் பிரபஞ்சம் தழுவியதுமாகும் – ஜனாதிபதி

இயேசுவின் தத்துவம் நித்தியமானதும் பிரபஞ்சம் தழுவியதுமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஒருவரது நம்பிக்கைக்குப் புறம்பாக, நாம் எல்லோரும் எமக்கும் ஒருவர் மற்றவருக்கும் இந்த உலகில் உண்மையானதும் நீடித்ததுமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு கடமை உணர்வைக் கொண்டுள்ளோம் என்றும் அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். நத்தார் உணர்வையும் அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களை மனதிற்கொண்டு, இலங்கையில் முப்பது வருடகால…

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

இன்று தனது 79 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாப்பரசர் அவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் தான் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, உலக மக்களுக்கான அவரது உயர்ந்த பணிகளும் இந்த உலகை ஒரு சிறந்த அமைதியன இடமாக ஆக்குவதற்கான அவரது முயற்சிகளும் தொடர வேண்டுமென்றும் ஜனாதிபதி அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

மியன்மார் தேர்தலில் பாரிய வெற்றியீட்டிய ஆங் சான் சூ கீக்கு ஜனாதிபதி வாழ்த்து

மியன்மார் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க பாரிய வெற்றியீட்டிய ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் திருமதி அவுன் சான் சூ கீ அவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமதி அவுன் சான் சூ கீ அவர்களுடன் நேற்று (15) தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், திருமதி ஆங் சான் சூ கீ அவர்களின் அறிவுஞானமும் தைரியமும் மியன்மார் மக்களுக்கும் ஏனைய உலக மக்களுக்கும் மகிழ்ச்சியினையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர வேண்டுமென…

தீபாவளியின் தீபவொளி உள்ளங்களில் நல்லிணக்கத்திற்கான ஒளியை கொண்டுவரட்டும் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுவதைப் போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதன் காரணமாக அவர்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி: உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகு விமரிசையாகக்…

NEW