Category: National Chronic Kidney Prevention Programme

அநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு

நாட்டின் அப்பாவி மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லப்படும் நலன்புரி சேவைகளை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04 வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எவர் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் கடந்த 04 வருட காலத்தில் நாட்டினுள் மக்களுக்கான சேவைகள் வலுவடைந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அப்பாவி மக்களுக்காக அந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி…

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர்…

களுத்துறை, ஏதகம “போசத் மாபிய செவன” நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பௌத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களின் பாதுகாப்பு கருதி களுத்துறை, ஏதகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “போசத் மாபிய செவன” நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. பயாகல, மலேகொட ஸ்ரீ புஷ்பாராம விகாராதிபதி சங்கைக்குரிய பெந்தர வல்லாவிட்ட பிரதான சங்கநாயக்கர் வண. மலேகொட நந்த தேரரின் எண்ணக்கருவிற்கமைய இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் சுமார் ஐம்பது பேர் அளவில்  தங்குமிட வசதியை…

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

ஜனாதிபதி அவர்களால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (28) பார்வையிட்டார். தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். சிறுநீரக நோயினால் அல்லலுறும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் கொண்டிருந்த நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், ரூபா 12,000 மில்லியன் செலவில்…

பொலநறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாணத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது – ஜூலை மாதம் ஜனாதிபதி தலைமையில் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்த அவர்களும், சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் Yang Zuoyuan  அவர்களும் உடன்படிக்கையில்…

சிறுநீரக நோய்த் தடுப்புக்காக ஆற்றும் பெரும்பணியைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விசேட சர்வதேச விருது

இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்புக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றும் பெரும் பணியைப் பாராட்டி சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பு ஜனாதிபதி அவர்களுக்கு விசேட விருது வழங்கி கௌரவித்துள்ளது. இன்று (19) பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பின் தலைவி பேராசிரியர் அடீரா லெவின் அம்மையாரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள ஆதரவற்ற…

மேல் மாகாண விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மேல் மாகாண விவசாய நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, சுகாதார, மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (08) ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தில் திறந்து வைத்தார். இன்றும் நாளையும் இடம்பெறும் இக்கண்காட்சி, மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், இளைஞர் சமூகத்தினர், விவசாய சமூகத்தினர் மற்றும் மாகாணத்தில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாயத்துறை தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கும்…

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது. இன்று முழு நாட்டிற்கும் ஒரு சவாலாக மாறியுள்ள சிறுநீரக நோய் தடுப்பிற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய ரீதியான ஒரு தேவைப்பாடாகக்…

இலங்கை அணி உலகக்கோப்பையை வென்று இருபது வருடங்கள் நிறைவு

ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வு இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று 20 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட கண்காட்சி கிரிக்கட் போட்டியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (19) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கொழும்பு சீ சீ சீ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் மற்றும் புதிய கிரிக்கட் வீரர்கள் பலரையும் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.…

சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சுற்றாடல், சமூக மற்றும் சுகாதாரம் ஆகிய 03 துறைகளின் கீழ் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பு பற்றிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. சிறுநீரக நோய்த் தடுப்பு தொடர்பான சீனாவின் விஞ்ஞான அக்கடமி மற்றும் நீர்ப்பாசன, நீர்வடிகாலமைப்பு சபை ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விசேட செயலமர்வு நேற்று (15) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றதுடன் அதன் இறுதி நிகழ்வின்போது நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப்…

NEW