Category: National Chronic Kidney Prevention Programme

சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சுற்றாடல், சமூக மற்றும் சுகாதாரம் ஆகிய 03 துறைகளின் கீழ் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பு பற்றிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. சிறுநீரக நோய்த் தடுப்பு தொடர்பான சீனாவின் விஞ்ஞான அக்கடமி மற்றும் நீர்ப்பாசன, நீர்வடிகாலமைப்பு சபை ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விசேட செயலமர்வு நேற்று (15) கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றதுடன் அதன் இறுதி நிகழ்வின்போது நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப்…

சிறுநீரக நோயின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்டெடுப்பதே எனது எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

நான் சுகாதார அமைச்சராக பணியாற்றியபோது மிகப் பெரும் சமூக அவலமாகவிருந்த சிறுநீரக நோயின் பிடியிலிருந்து அப்பாவிப் பொதுமக்களை மீட்டெடுப்பதே எனது முதன்மையான எதிர்பார்ப்பாக இருந்தது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். இதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் அப்பாவி மக்களை இவ்வனர்த்தத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு நான்…

ஒரு வருடத்தில் 5000 சிறுநீரக நோயாளிகள் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு

உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்பு ஒரு வருடத்தில் இலங்கையில் ஐயாயிரம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய உற்பத்திகளுக்காக நச்சு இரசாயனப் பொருட்களை பயன்படுத்துதல், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் நிலைமைகள் இதற்கு பிரதான காரணங்களாகும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு, இந்த நிலைமைகள் குறித்து உடனடியாக தமக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின்…

NEW