Category: Press

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதியரசரான விஜித் மலல்கொடவினால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர்…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி (2019.05.31 – புதுடில்லி)

ஊடக நண்பர்களே! புதுடில்லியில் வைத்து உங்களை சந்திக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கௌரவ பிரதமர் மோடி அவர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்திய ஜனாதிபதி அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் என்ற வகையிலேயே நான் இதில் கலந்துகொண்டேன். இத்தருணத்தில் இந்தியாவின் புதிய அரசாங்கத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பாகவும் எனது மக்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். உலகில் மிகப் பெரிய ஜனநாயக அரசு…

முல்லை மக்களின் குறை தீர்க்கும் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வறுமையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகவே முல்லைத்தீவு மாவட்டம் பல தசாப்தங்களாக இருந்து வருகின்றது. நீண்ட காலமாக நேரடி யுத்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தமை, அதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டமை, அடிப்படை வசதிகளில் முன்னேற்றம் ஏற்படாமை, தலைநகரத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கின்றமை, வருடத்தில் கூடுதலான காலப்பகுதி வரட்சியினால் பாதிக்கப்படுகின்றமை ஆகிய காரணங்களினால் வெளிமுதலீடுகளை உள்வாங்குவதில் பாரிய பின்னடைவை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றமை ஆகிய காரணங்களின் ஒட்டுமொத்த விளைவாகவே முல்லைத்தீவு மாவட்டம்…

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை…

ஜனாதிபதிக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்குமிடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பரோனஸ் பெற்றீஸியா ஸ்கொட்லான்ட் அவர்களுக்குமிடையில் இன்று (23) ஒரு விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்பவே தான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடைமுறைகளை தொடர்ந்தும் பேணிவருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு தான் சபாநாயகரிடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பில்…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள். இறைவனின் துணை. எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே, இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களைப் பற்றி மிக சுருக்கமான ஒரு தெளிவை முன்வைப்பதற்காகவாகும். இன்று நாம் ஒரு புதிய வருடப்…

NEW