Category: Special

ஊடக அறிவித்தல்

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் நிவாரணம் வழங்குதல். சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற…

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (2019.11.16 கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து)

வணக்கம், கடவுள் துணை,  மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களே,  அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே, 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் என்னை வெற்றிபெற செய்வதற்காக எனக்கு வாக்களித்த சுமார் 62 இலட்சம் மக்களுக்கும் அன்று போலவே இன்றும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 2015 ஜனவரி 08ஆம் திகதி வெற்றிபெற்று 09ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் சில தினங்களில் கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் நாட்டு…

விசேட ஊடக அறிவித்தல்

2019 நவம்பர் 16ஆம் திகதி அதாவது நாளைய தினம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நாடு பூராகவும் உள்ள சகல வாக்காளர்களும் சுதந்திரமாக தமது வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பொலிஸார் மற்றும் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையினர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், தேவையற்ற பிரசாரங்களையும் வதந்திகளையும்  நம்பி ஏமாறாது மக்கள் தமக்கான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல…

ஊடக அறிவித்தல்

ஜனாதிபதி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு நெருக்கமான சிலருடன் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதாகவும், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் மேற்கொண்ட சில தீர்மானங்கள் தொடர்பாக  ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவலை தெரிவித்ததாகவும், நவம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை. மேலும் எந்தவொரு தரப்பினரும் தேர்தலின் இறுதி சில நாட்களுக்குள் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தமாக இத்தகைய போலியான செய்திகளை உருவாக்கி பிரச்சாரம் செய்வது…

ஊடக அறிவித்தல்

ராஜகிரிய, ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளியாக தண்டனை விதிக்கப்பட்டு ஆயுட்தண்டனை அனுபவித்துவரும் 34 வயதுடைய டொன் ஸ்ரமந்த ஜூட் அந்தணி ஜயமக என்பவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மதத் தலைவர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர் அணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு எழுத்து மூலமான கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். இவ் இளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக தலைமை…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  இந்த நிவாரணப் பணிகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முப்படையினரின் ஒத்துழைப்புடன் துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுக்கு நிதியை தடையாகக்கொள்ள வேண்டாமென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி அவர்கள், தேவையான நிதியினை நிதி…

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட அன்னதான நிகழ்வு மற்றும் ஆசிர்வாத பூஜை

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் 68 வது பிறந்த நாளான இன்று (03) அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட அன்னதான ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 68 மகா சங்கத்தினர் இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ராமஞ்ய மகா நிக்காய ஸ்ரீ கல்யாணி யோகஸ்ராம அமைப்பின் பிரதான அநுநாயக்கர் வண.பகலபிட்டியல ஜனநந்தாபிதான தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.  இதன்போது மகா சங்கத்தினால் பிரித்பாராயனம் செய்யப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.…

முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அணியின் நடனக் குழுவிற்கு ஜனாதிபதி பாராட்டு

முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அணியின் நடனக் குழுக்களுக்கு நேற்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாராட்டு தெரிவித்தார். நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடனக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நடனக் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார். அரச வைபவங்களை கலைநயமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு இந்த நடனக் குழுக்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள்,  அவர்களின் சேவைகளுக்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாக இத்தகைய…

ஊடக அறிவித்தல்

பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடந்த 2019.08.20ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தமை தொடர்பாக பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கவனம் செலுத்தியுள்ளது. பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் கோரிக்கையின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதுடன், இந்தியாவினால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டமை மற்றும் சட்டப் பிரிவு 35A இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான அண்மைய அபிவிருத்திகள் குறித்து பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் கருத்துக்களை கவனமாக…

NEW