Category: Special

மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்துவரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரச நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்துவருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். “பூகோல செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை“ என்ற கருப்பொருளில் இன்று (13) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச…

இலங்கையில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தைப் பற்றிய ஜனாதிபதி அவர்களின் விசேட அறிக்கை

எனது அன்புக்குரிய மக்களின் முன்னால் இவ் அறிக்கையினை முன் வைப்பதற்கான காரணம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்ற துன்பகரமான நிலைமையும் அதையிட்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் அறியத் தருவதற்காகவே ஆகும். சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்கள், சொத்துக்களின் இழப்பு பற்றியும் இடம்பெயர்ந்து முகாம்களில்…

நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரிப்பதற்கு விசேட குழு

நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இதுதொடர்பாக உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட குழுவொன்றினை நியமித்துள்ளார். இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசில் பிரேம ஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதியமைச்சர்களான எரன் விக்ரமரத்ன, அஜித் பி பெரேரா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். இக்குழுவினருடைய முதலாவது அறிக்கை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்விசேட குழுவினர் மின்சக்தித்துறையில் உள்ள பிரச்சனைகளை…

நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் சரியான முறையில் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

நாட்டினதும் நாட்டு மக்களதும் நன்மைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் சரியான முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (07) முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நச்சுத் தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். மக்களுக்குப் பொருத்தமானவற்றைப் பெற்றுக்கொடுத்தலே நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் ஆட்சியாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோரின் கடமையாகுமென ஜனாதிபதி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.…

NEW