Category: ஜனாதிபதியின் உரைகள்

விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மெதிரிகிரிய தானிய களஞ்சிய நிலையம் மக்களிடம் கையளிப்பு விவசாய உற்பத்திகளை மேம்படுத்தி, நாட்டில் சிறந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையினை பெற்றுக்கொடுப்பதனூடாக அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் தேசிய அபிவிருத்தி திட்டங்களில் பிரதான வேலைத்திட்டமாக கருதப்படும்  விவசாயிகளின் தானிய களஞ்சிய நிலையங்கள் நாடளாவிய ரீதியில் நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை மெதிரிகிரிய தானிய களஞ்சிய நிலையம் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அவர்களால்…

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், வலுவான ஜனநாயக முறைமையுள்ள நாட்டில் அவ்வாறு இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வெகுவிரைவில் இந்த…

பொலன்னறுவை றோயல் கல்லூரி மாணவனின் புதிய வீட்டுக் கனவு ஜனாதிபதியினால் நனவானது….

2018 ஆகஸ்ட் 02ஆம் திகதி ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கிரிக்கட் மைதானத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது அக்கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்கும் ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவன் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் கதை ஒன்றை கூறினார். மிக அழகிய முறையில் அக்கதையை கூறிய மாணவனை தன்னிடம் அழைத்த ஜனாதிபதி அவர்கள், அவனது திறமையை பாராட்டி, அவனது தேவைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாணவனின்…

நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் ஆகும் போது முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி உறுதியளிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தாய் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலையை தோற்றுவித்தது தான் அல்ல என்றும், நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே ஆவார் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த தூரநோக்கற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து…

மக்கள் சேவை பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருப்பது அனைத்து அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். இன்று (30) பிற்பகல் கொழும்பு சுஹததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். சுமார் 27,000…

ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது வருட நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

வெளிநாட்டு சிந்தனைகளுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் ஏற்ப செயற்பட்டு, ஜோன் டொய்லி முறைமைக்கு மீண்டும் நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முயற்சிக்கும் சில அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்திற்கு 200 வருடம் நிறைவடையும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ சுதந்திர போராட்டத்தின் 200ஆவது நினைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்…

ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு

பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி இலங்கை மக்கள் தன்னை…

அரசியலில் தான் எதிர்நீச்சல் போடுவது தாய்நாட்டின் எதிர்காலத்திற்காகவேயாகும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு

அரசியலில் தான் எதிர்நீச்சல் போடுவது தாய்நாட்டின் எதிர்காலத்திற்காகவேயாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இந்த முயற்சி நாட்டுக்காக எதிர்காலத்தை வெற்றிகொள்ளக்கூடிய ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தாய்நாட்டுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் எந்தவொரு இடத்திலும் தான் தனிமைப்படவில்லை என்றும் நாட்டை நேசிக்கின்ற அனைத்து மக்களும் தன்னுடன் கைகோர்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இன்று (23) பிற்பகல் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் வெள்ளி விழாக்காணும் ஜனாதிபதி விருது…

”நாட்டை பாதுகாக்கும் மக்கள் மகிமை” மக்கள் சந்திப்பு பேரணியில் ஜனாதிபதி ஆற்றிய உரை

நான்கு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரே மேடையில் இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்களே நவம்பர் மாதம் இலங்கையில் ஒரு முக்கியமான மாதம். 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்திலிருந்து விலகினேன். நான்கு வருடங்களுக்கு பின்னர் 2018 நவம்பர் மாதம் மீண்டும் இந்த மேடையில் ஒன்றாக சந்திக்கின்றோம். இந்த நாட்டில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்ஹவை அப்பதவியிலிருந்து நீக்கியதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர்…

வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (29) முற்பகல் திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்ற தேசிய ஏர்பூட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், அரசியல் தலைமைத்துவமும் வழிகாட்டலுமின்றி இன்று ஆறு மாகாண சபைகளின் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். சுற்றுநிரூபங்கள் காரணமாக  அதிகாரிகளின் சேவைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் சிறந்த…

NEW