Category: ஜனாதிபதியின் உரைகள்

கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படின் சர்வதேச பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறலாம்……  – ஜனாதிபதி

பௌத்த கோட்பாடுகளின் ஊடாக பிரச்சினைகளுக்கும், வறுமைக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதன் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பேண்தகு அபிவிருத்தி மற்றும் பேண்தகு சமாதானத்தின் குறிக்கோள்களை அடைவதனூடாக சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இதன் பொருட்டு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த செயற்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது…

தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது  –  ஜனாதிபதி

விலைமதிக்க முடியாத சிறந்த சேவையான தாதியர் சேவையில் உள்ளவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (13) முற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நினைவு வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாதியர் சேவை மற்றும் வைத்திய சேவை வீழ்ச்சியடைந்துள்ளது என சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றபோதும், அச்சேவையில் உள்ள பெரும்பாலானவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.…

ஹட்டன் டிக்கோயா மருத்துவமனை இந்திய பிரதமரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது

இந்திய அரசின் அன்பளிப்பாக 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஹட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இன்று (12) நண்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 150 கட்டில்களைக் கொண்ட வாட்டுத் தொகுதி, வைத்திய உபகரணப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட வைத்திய நிபுணர்களின் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உரிய உபகரணங்களுடன் கூடிய மகப்பேற்று அறை…

சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில்

சமத்துவமும், நியாயமும் கொண்டவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருளை அகற்றி ஒளியை ஏற்றுதலே இந்த சர்வதேச வெசாக் தினத்தைக் கொண்டாடும் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றதுடன் நிகழ்வின் பிரதான உரையை ஆற்றும்போது இந்திய…

பௌத்த சமயம் தொடர்பில் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போலியான பிரச்சாரங்களையும் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய இடத்தை அதேபோன்று தொடர்ந்தும் பாதுகாத்து ஏனைய  சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமென குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று (10)  முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது…

அரச வெசாக் விழா ஜனாதிபதி தலைமையில்

மமதைக்கு பதிலாக தன்னலமின்மையை மதிக்கும் ஒழுக்கமான, சிறந்த நாட்டு பிரஜைகளாக முன்னேறுவதற்கு இந்த உன்னதமான வெசாக் காலத்தில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (09) பிற்பகல் கேகாலை வட்டாரம அரகந்த மலியதேவ விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழா 2017 நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய சமூகத்தில் பெற்றோர், பிள்ளைகள் உறவுகூட நாளாந்தம் சீர்குலைந்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாறான நிலை நாட்டில்…

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க உதவுமாறு ஜனாதிபதி மகா சங்கத்தினரைக் கோருகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இலங்கை வரலாற்றை கூறும் புராதன மரபுரிமைகளும், தேசிய வளமும் ஆன ஓலைச்சுவடிகளை அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் மகா சங்கத்தினரிடம் கேட்டுக்கொண்டார். புனித தந்த தாது எழுந்தருளியுள்ள புண்ணியபூமியில், அஸ்கிரி மகாவிகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட அஸ்கிரி மாசாய சைத்தியத்தின் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய நிகழ்வு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அவர்களது தலைமையில் நடைபெற்ற போதே ஜனாதிபதி அவர்கள் மேற்குறித்த வேண்டுகோளை…

சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கைசார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தேவைகளுக்காக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – ஜனாதிபதி

சைட்டம் தனியார் மருத்துவ பீடத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் கொள்கைசார்ந்த தீர்மானங்களை எடுத்துள்ள நிலையில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டு சிலர் வேலை நிறுத்தங்களில் ஈடுபவது கவலையளிக்கிறது என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (05) முற்பகல் அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். அரசியல் சம்மட்டிகளாகவன்றி தங்களுடையவும் நாட்டினதும் எதிர்காலத்திற்காக தமது கல்வி நடவடிக்கைகளை  வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லுமாறு வைத்தியபீட மாணவர்களிடம்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட மாட்டாது – ஜனாதிபதி

உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்திய பிரதமர் இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,  இந்த அனைத்து…

உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் மிகவும் அவசியம் – ஜனாதிபதி

இன்று உலகிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமானதாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ‘இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவாலும்’ என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள்…

NEW