Category: ஜனாதிபதியின் உரைகள்

”சுரக்க்ஷா” காப்புறுதி திட்டத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களினால் சிறுவர்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரகடனங்களுக்கு அமைவாக செயற்படும் அதேநேரம், அவற்றிற்கு அப்பாலும் விரிவான பல செயற்பாடுகளை எதிர்கால சந்ததியினரின் நன்மைக் கருதி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்க்ஷா காப்புறுதி திட்டத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் தேசிய நிகழ்வு இன்று (02) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றவேளை அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்…

சர்வதேச சிறுவர் தினமானது நேர்மையான சமூகமொன்றை உருவாக்க முயற்சிக்கும் நாளாக அமைய வேண்டும் – ஜனாதிபதி

மனித வாழ்க்கைக்கும் பணப் பெறுமதியை வழங்கும் வர்த்தக மயமான சமூகத்தில், சர்வதேச சிறுவர் தினமானது நேர்மையான சமூகமொன்றினை உருவாக்கும் பொருட்டு முயற்சிக்கும் நாளாக அமைய வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பணத்திற்கு முன்னால் இன்று பிள்ளைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதுடன், பணத்தினை தேடி அதன் பின்னால் செல்லும் சமூகத்தினை ஆன்மீக ரீதியில் ஆசுவாசப்படுத்தி பிள்ளைகளுக்கு அன்பு செலுத்தும், மனிதாபிமானத்தை மதிக்கும் சமூகத்தினைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். …

அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் – ஜனாதிபதி

அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அவர்களது பாதுகாப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்றைய தினம் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இன்று (01) முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு…

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி

தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நேற்று (27) பிற்பகல் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற இலங்கையில் டெம்பிட விகாரைகள் தொடர்பான ஆய்வு நூலை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எமது வரலாற்று மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராமத்திலுள்ள பௌத்த விகாரைகளை பாதுகாத்து அவற்றின்…

அபிவிருத்தி செயற்பாடுகளில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி

பதுளை – ஹாலிஎல மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் 110,000 பேருக்கு குடிநீர் வழங்கும் தெமோதர குடிநீர் திட்டம் மக்களிடம் கையளிப்பு  பதுளை நகரில் புதிய வாகனத் தரிப்பிடம் மக்களிடம் கையளிப்பு  ஊவா மாகாணத்திற்கு 320 புதிய அரச சேவை நியமனங்கள் இன்று நாட்டில் அரசியல் ஸ்திரப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ரீதியாக அனைவருடைய உதவியும் இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு குறைவின்றி கிடைத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் எவ்வித முறைகேடுகள்…

அத்தியாவசியமற்ற மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

அத்தியாவசியமற்ற உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் அனைத்து உணவு பொருட்களினதும் இறக்குமதியை நிறுத்துவதற்கு தேசிய பொருளாதார பேரவை ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (25) பிற்பகல் களுத்துறை போம்புவல சேவைக்கால பயிற்சி நிறுவனத்தின் விவசாய கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மட்டும்  2500 கோடிக்கு கூடுதலான பணம் செலவிடப்படுவதாகவும் ஆயிரக் கணக்கான ஆண்டு நாட்டின் பண்பாட்டையும் தனித்துவத்தையும் பாதுகாத்து…

நிதானமானதும் தெளிவானதுமான பயணத்தின் ஊடாக பொருளாதார சுபீட்சத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நாட்டின் சுயாதீனத் தன்மையையும்  இறைமையையும் பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பயணம் மெதுவானது என்றபோதும் தெளிவான வெற்றியை அடைந்துகொள்வதே  அரசாங்கத்தின் இலக்காகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தெரிவித்தார். சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்கிறார்கள். விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கின்றார்கள். ஆயினும் 30 ஆண்டுகால போர் நிலவிய நாடென்ற வகையிலும், பிளவுகள் ஏற்பட்டிருந்த நாடென்ற வகையிலும், நாட்டினுள்…

அனைவரும் சுற்றாடல் பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற வேண்டும் – ஜனாதிபதி

சுற்றாடல் பாதுகாப்பு, சுற்றாடல் மதிப்பீடு மற்றும் சுற்றாடல் பெறுமானங்கள் தொடர்பில் அனைவரும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரியவாறு நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ‘இயற்கை இல்லம்’ எனும் பெயரிலான கட்டிட தொகுதியை இன்று (14) மாலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றாடல் சட்ட விதிகளை அமுல்படுத்த…

ஏற்றுமதி விருது விழா ஜனாதிபதி தலைமையில்

சர்வதேச அமைப்புகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் நடுநிலையான வருமானம் பெறும் நாடென எம்மை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு எமது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது இன்றியமையாததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (14) முற்பகல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பொருளாதார பேரவையை நிறுவும் போது இவ்விடயம் கருத்தில்…

கூட்டரசாங்கத்தின் பயணம் வெற்றிகரமானது – ஜனாதிபதி

எவர் எதனை கூறினாலும் கூட்டரசாங்கத்தின் கடந்த இரண்டரை ஆண்டுகால பயணம் வெற்றிகரமானதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நாட்டில் பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முதன்மை கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய கூட்டரசாங்கத்தின் சௌபாக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கை ‘வி-2025’ வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டினதும்இ…

NEW