Category: ஜனாதிபதியின் உரைகள்

சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி.

மக்களுக்கு சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கலகெதர புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை இன்று (22) முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். சமூக நீதி, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய அம்சங்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பாரிய செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 18வது திருத்தம்…

காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு…

விளையாட்டு துறை சாதனையாளர்களைப் பாராட்டும் விருது விழா ஜனாதிபதி தலைமையில்

ஆரோக்கியமான ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு விளையாட்டினால் பெரும் உந்துசக்தி கிடைப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். நேற்று (19) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2016 ஜனாதிபதி விளையாட்டு விருது விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். விளையாட்டுத்துறை சாதனையாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்குவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவிற்கமைய கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி விளையாட்டு விருது விழா இரண்டாவது தடவையாக நடைபெற்றது. சாதனைபடைத்த…

முப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (19) பிற்பகல் பாராளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள படைவீரர் நினைவு தூபி வளாகத்தில் நடைபெற்ற 2017 தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த, மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை குறைவின்றி…

அனைத்து இனங்களுக்கும் சமூக நியாயத்தை வழங்கும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் நாட்டில் ஆட்சியமைக்க முடியும்   – ஜனாதிபதி

சிங்கள, தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு சமூக நியாயத்தை நிறைவேற்றும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவரும் ஆட்சியமைக்க முடியாதெனவும் இன்று (15) பிற்பகல் கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரே நாட்டு மக்களாக அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைத்து இனங்களிலுமுள்ள பிற்போக்குவாதிகள் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தி…

மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடுகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்

நாட்டின் நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறையின் அபிவிருத்தியின் பொருட்டு பாரிய செயற்திட்டங்கள்​அரசினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மற்றுமொரு பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மாதுறு ஓயாவின் வலது கரைப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடு இவ்வருடத்தில் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார். அத்துடன் அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் காணப்படும் 600 குளங்களை புனரமைக்கும் செயற்திட்டமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இவ்வருடத்தில் செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (15) முற்பகல் அரலகங்வில விலயாய…

கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படின் சர்வதேச பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறலாம்……  – ஜனாதிபதி

பௌத்த கோட்பாடுகளின் ஊடாக பிரச்சினைகளுக்கும், வறுமைக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடைவதன் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பேண்தகு அபிவிருத்தி மற்றும் பேண்தகு சமாதானத்தின் குறிக்கோள்களை அடைவதனூடாக சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இதன் பொருட்டு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கண்டி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த செயற்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது…

தாதியர் சேவையில் உள்ளவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது  –  ஜனாதிபதி

விலைமதிக்க முடியாத சிறந்த சேவையான தாதியர் சேவையில் உள்ளவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (13) முற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நினைவு வைபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தாதியர் சேவை மற்றும் வைத்திய சேவை வீழ்ச்சியடைந்துள்ளது என சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றபோதும், அச்சேவையில் உள்ள பெரும்பாலானவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.…

ஹட்டன் டிக்கோயா மருத்துவமனை இந்திய பிரதமரால் மக்களிடம் கையளிக்கப்பட்டது

இந்திய அரசின் அன்பளிப்பாக 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பூரண உபகரண வசதிகளுடன் கூடிய ஹட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இன்று (12) நண்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 150 கட்டில்களைக் கொண்ட வாட்டுத் தொகுதி, வைத்திய உபகரணப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட வைத்திய நிபுணர்களின் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, உரிய உபகரணங்களுடன் கூடிய மகப்பேற்று அறை…

சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில்

சமத்துவமும், நியாயமும் கொண்டவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருளை அகற்றி ஒளியை ஏற்றுதலே இந்த சர்வதேச வெசாக் தினத்தைக் கொண்டாடும் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 14வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றதுடன் நிகழ்வின் பிரதான உரையை ஆற்றும்போது இந்திய…

NEW