பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிஷியா ஸ்கொட்லன்டுடன் ஜனாதிபதி சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிஷியா ஸ்கொட்லன்ட் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது. நியூயோர்க் நகரில் ஜனாதிபதி அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வருகை தந்த செயலாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (28) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

போதைப்பொருட்கள், தொற்றா நோய்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இன்று (28) நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக உலக சுகாதார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருட்கள், தொற்றா நோய்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அங்கு பிரகடனமொன்றை முன்வைத்தார். இப்பிரகடனத்தை ஜனாதிபதியின் சார்பாக மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைத்தார். மதுபானங்களை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச பிரகடனம் தொடர்பில்…

இராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – ஜனாதிபதி

தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று (26) பிற்பகல் நியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட…

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்து

நாட்டின் சமூக அபிவிருத்தியில் நேரடி தாக்கங்களை செலுத்தும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்துடனான புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அமெரிக்க விஜயத்தின்போது நேற்று (26) பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதற்கமைய, சமூக முன்னேற்றத்திற்கான நிதியம் மற்றும் சமூக தொழில் முயற்சியாண்மைக்கான நிதியம் ஆகியவற்றை தாபித்தலுடன் தொடர்பான புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டங்களில் தனியார்…

வன விலங்குகளால் உணவு பொருட்களுக்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் ஒத்துழைப்பு

வன விலங்குகளால் உணவு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (26) பிற்பகல் சந்தித்தபோதே சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Shenggen Fan இவ்விடயம் தொடர்பில் தனது இணக்கத்தினை தெரிவித்துள்ளார்.…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களினால் இலங்கை ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் அனைத்து  அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம் கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் (New York Palace) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் இராப்போசனத்திற்காக கெளரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இந்நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும்…

ஜனாதிபதி மற்றும் மலேசியா பிரதமருக்கிடையில் சந்திப்பு

குடிசைவாசிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு செயற்திட்டத்திற்கு உட்சபட்ச        ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா பிரதமர் ஜனாதிபதிக்கு உறுதியளிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமட் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதன்போது மலேசிய பிரதமர் சார்பில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகுந்த கெளரவத்துடன் வரவேற்கப்பட்டார். இலங்கை…

எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் நோக்குங்கள் என ஜனாதிபதி உலக மக்களுக்கு அழைப்பு

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் நோக்குங்கள் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் இலங்கை நேரப்படி இன்று (26) அதிகாலை ஆற்றிய தனது விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார். ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும்…

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வு ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று (25) பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. இந்த பிரதான அமர்வில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி…

NEW