கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ‘இடுகம’ என்ற சின்னத்துடன் முன்னோக்கி…

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ‘இடுகம’ என்ற சின்னத்துடன் முன்னோக்கி…

‘கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் தற்போது இடுகம (செய்கடமை) என்ற சின்னத்துடன் செயற்படுத்தப்படுகிறது. இதற்கு இடுகம– கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் என பெயரிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு அன்பளிப்புகளை மேலும் கவரும் வகையில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் கடந்த மார்ச் 23ஆம் திகதி இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி நிதியம் அதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்கியது.

கொவிட்-19 நோயத்தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்ததாக சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்தல் பாதுகாப்பு நிதியத்தின் நோக்கமாகும். நிதியத்திற்கு அன்பளிப்புகளை சேகரிப்பதற்காக இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையில் விசேட கணக்கொன்று திறக்கப்பட்டுள்ளது.

அதன் இலக்கம் 85737373 ஆகும். வங்கி குறியீடு 7010, கிளை குறியீடு 660 சுவிப்ட் குறியீடு BCEYLKLX.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். சட்டரீதியான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்பு தொகைகள், வரி மற்றும் அந்நியச் செலாவணி சட்டதிட்டங்களில் இருந்து விடுவிக்கப்படும். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www. itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும்.

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் நிதி மற்றும் வங்கித்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 18 தொழில்வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன் இக்குழுவிற்கு தலைமைவகிக்கின்றார். ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை நிதி அதிகாரி ரவிந்திர ஜே.விமலவீர நிதியத்தின் செயலாளராக உள்ள அதேநேரம் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி,

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (மேஜர் ஜெனரல்) ஜீ விஜித ரவிப்பிரிய, இலங்கை சதோச நிறுவனத்தின் தலைவர் நுஷாட் எம். பெரேரா, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பீ.டீ. இந்திக எல். விஜேகுணவர்த்தன, ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் என்.டபிள்யு.ஜீ. ஆர்.டீ நாணயக்கார, இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.பீ. ரஸல் பொன்சேக்கா, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சுவர்ணஜோதி, கொழும்பு உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ஜே.எம்.எஸ். ஜீ ஜயசுந்தர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Share This Post