சிறைக்கைதிகள் தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

சிறைக்கைதிகள் தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக்கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு அதன் முதலாவது கொடி இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருவதுடன், சிறைக்கைதிகளுக்கான மருத்துவ சிகிச்சைகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கான பல்வேறு சமூக நலன்பேணல் திட்டங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.ஏ.டீ. சிறிசேனவினால் ஜனாதிபதி அவர்களுக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது.

நீதியமைச்சர் தலதா அதுகோரள, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்ஹ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Share This Post

NEW