நாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியை பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகும் – ஜனாதிபதி

நாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியை பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகும் – ஜனாதிபதி

நாட்டின் கல்விமேம்பாட்டுக்காக அரசு பாடுபடும்போது சிறந்த கல்வியைப் பெற்று, நற்பண்புடைய பிரஜைகளாக வருவது மாணவர்களது பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எஹெலியகொட தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ENCO 2016 கல்விக்   கண்காட்சியை இன்று (13) பிற்பகல் திறந்து வைத்தபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபல சிறிசேன அவர்கள், இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஓராண்டு காலத்தில் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளங்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசினால் முடிந்துள்ளதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பினை வழங்கி கல்வித்துறையில் நாட்டை முன்னோக்கி நகர்த்துதல் அரசின் நோக்கமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதை காண முடிவதுடன், பரீட்சைகளை மட்டுமன்றி வாழ்க்கையினை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பாகவும் மாணவர்களை அறிவூட்டுவதற்கு பாடசாலைகளின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை ஜனாதிபதி அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்.

கல்விக் கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள். அதனைப் பார்வையிட்டதுடன், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பற்றி விசாரித்து அவர்களுடன் அளவளாவினார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் தலத்தா அத்துகோரல, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், பிரதி அமைச்சர் துனேஷ்  கங்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவ மாகாண சபை தவிசாளர் கஞ்சன ஜயரட்ன, கல்லூரி அதிபர் திருமதி.ஹேமாலி ராஜகுரு, பாடசாலையின் ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

 

 

Share This Post

NEW