போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் எதுவித மாற்றங்களும் இல்லை.  – ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் எதுவித மாற்றங்களும் இல்லை.  – ஜனாதிபதி

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக மருத்துவமனை நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவையில் ஆரம்பம்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எவ்வாறான எதிர்ப்புகள் தோன்றியபோதிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென  வலியுறுத்தினார்.

சட்டம், சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை பிரதானிகளுடனான கலந்துரையாடலொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதுடன், இதன்போது இந்த சகல துறைகளும் உள்ளடக்கப்படும் வகையில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதுடன், மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப்பட்டியலும் திகதியும் அக்குழுவினரால் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் பூரண நன்கொடையில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (21) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சமூக சீரழிவுகள் ஏற்படக்கூடிய நிலைமையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை தாமதித்தலும், தடுத்தலும் உகந்ததல்ல என தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் போதைப்பொருட்களால் ஏற்படும் சமூக சீரழிவினை தடுப்பதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருட்களினால் நாட்டிற்கு ஏற்படும் அழிவினை தடுப்பதற்கு தம்முடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே அரசாங்கம் வடக்கிலுள்ள இராணுவத்தினரை துரித கதியில் அகற்றுகின்றது என தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் சிலரால் முன்னெடுக்கப்படும் அத்தகைய போலி பிரசாரங்களை தான் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு பிரச்சினையும் தற்போது இல்லை என்பதுடன், தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள சர்வதேசத்தின் ஒத்துழைப்பின் ஊடாக அது மேலும் உறுதி செய்யப்படுகின்றதெனக் குறிப்பிட்டார்.

சிறுநீரக நோயினால் அவதியுறும் ரஜரட்ட விவசாய மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் எமது நட்பு நாடான சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் நிர்மாணிக்கப்படும் இந்த சிறுநீரக மருத்துவமனை தொடர்பில் தாம் கண்ட கனவினை நனவாக்க முடிந்துள்ளமைக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது நன்றி தெரிவித்தார்.

சிறுநீரக நோயினால் அவதியுறும் மக்களுக்கான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் பூரண அன்பளிப்பில் தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனைக்கான செலவு 12,000 மில்லியன் ரூபாவாகும்.

வட மத்திய மாகாணத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்படுவதுடன், உலகின் நவீன ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு அமையவுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனை 200 கட்டில்களை கொண்ட வாட்டுத் தொகுதி, 100 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, விசேட சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான 06 சத்திர சிகிச்சைக் கூடங்களையும் உள்ளடக்கியுள்ளது. 

200 ஆசனங்களைக் கொண்ட நவீன கேட்போர்கூடம் மற்றும் 300 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிட வசதிகளையும் மருத்துவமனை பணிக்குழாமினருக்கான விடுதி வசதிகளையும் இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.

24 மாதங்களில் நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தை 2020 ஜூலை மாதத்தில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நினைவுப் பலகையை இதன்போது ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்தார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சகல வசதிகளையும் கொண்ட 100 அம்புலன்ஸ் வண்டிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் வகையில் முதலாவது அம்புலன்ஸ் வண்டியை பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு கையளிப்பதற்காக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.

செஸ் விளையாட்டில் திறமைகளை வெளிக்காட்டிவரும் திம்புலாகல விலயாய ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் வெனுலி லெஹன்சாவின் எதிர்கால கல்வி  செயற்பாடுகளுக்காக 15 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கி வைத்தார்.

பிரதேசத்தின் மகாசங்கத்தினரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர்கள் லசந்த அழகியவன்ன, பைசர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க கொலோன்னே, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரனசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சம்பத் இந்திக்க குமார உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

 

 

 

 

Share This Post

NEW