சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

இலங்கை கிரிகெட் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக கிரிகெட் சபையின் தலைவருக்கு ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கிரிகெட் போட்டிகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிகெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW