அரசியலமைப்பு திருத்தமொன்றை செய்வதாயின் பலமானதொரு  பாராளுமன்றத்தை அமைப்பதற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

அரசியலமைப்பு திருத்தமொன்றை செய்வதாயின் பலமானதொரு  பாராளுமன்றத்தை அமைப்பதற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பு மாற்றம் அவசியம் என்றபோதும் அதன் மூலம் தான் எதிர்பார்ப்பது பாராளுமன்றத்தை பலப்படுத்தும் மாற்றமேயன்றி வேறு நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான மாற்றம் அல்ல என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (31) பிற்பகல் ஹொரனையில் உள்ள வரலாற்று முக்கியத்துமிக்க  ஒலபொடுவ ஸ்ரீ ஜயவர்தனாராம ரஜமகா விகாரையில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு பற்றி இன்று சிலர் பேசி வருகின்றபோதும் தனக்கு இன்னும் அப்படியொன்று கிடைக்கப்பெறவில்லை என்றும் அதுபற்றி தெளிப்படுத்தப்படவும் இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பு பற்றி பேசுவது ஒரு புறத்தில் தெற்கில் உள்ள பௌத்த மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், மறுபுறத்தில் அது வடக்கு மக்களை ஏமாற்றுவதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை செய்வதாயின் பலமான பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்கு தனது ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். பலமான பாராளுமன்றம் ஒன்று இல்லாதிருப்பதன் விளைவாக நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாது போவதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையும் இல்லாமல் போகும் நிலை உருவாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்

.புதிய மூலோபாயங்களுடன் பல்வேறு வெளிநாட்டு சக்திகள் இன்று தாய் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தான் நடைமுறைப்படுத்தியுள்ள நாட்டுப் பற்றுடைய தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் விமர்சிக்கப்படுவதும் இதன் காரணத்தினாலேயே ஆகும் என்றும் குறிப்பிட்டார். தமது அரசாங்க அதிகரத்தை கொண்டு நடத்துவதற்கும் தமக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் எவரேனும் வெளிநாட்டுச் சக்திகளின் அழுத்தங்களை பயன்படுத்துவார்களேயானால் அது இந்த நாட்டின் சுயாதீன தன்மைக்கும் இருப்புக்கும் எவ்விதத்திலும் பொறுத்தமற்றதாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் அதேநேரம் அனைத்து மக்கள் மத்தியிலும் அச்சத்தையும் பீதியையும் ஒழிக்கின்ற அரசியல் முறைமை ஒன்றையும் சமூக சூழலையும் கட்டியெழுப்புவது இன்று அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

ஹொரனை வரலாற்று முக்கியத்துவமிக்க ஒலபொடுவ ஸ்ரீ ஜயவர்தனாராம ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

113 வருடங்கள் பழமை வாய்ந்த இவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய உடுவே ஹேமாலோக்க தேரரின் வழிகாட்டலின் பேரில் சங்கைக்குரிய ஒலபொடுவே தம்மிக்க தேரரின் நெறிப்படுத்தலில் இத்தாலியின் மிலானோ நகரில் வசிக்கும் அந்தணி பெரேராவின் நிதி அன்பளிப்பில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நேற்று (31) பிற்பகல் விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் முதலில் சமய கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை மகா சங்கத்தினரிடம் கையளித்ததுடன், அங்கு புத்தபெருமானின் சிலைக்கு முதலாவது மலர் பூஜையையும் செய்தார்.

சியாமோ பாலி மகா நிக்காயவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரர், மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி நியங்கொட விஜித்த ஸ்ரீ அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர் தயாகமகே, இசுற தேவப்பிரிய, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW