‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1448 மில்லியனாக அதிகரிப்பு

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1448 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1448 மில்லியனாக அதிகரித்துள்ளது.

வெலிசரை சுவாச நோய் தொடர்பான தேசிய வைத்தியசாலை 135,044.53 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. குறித்த காசோலையை ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாக மற்றும் வழங்கல்) கே.பி.எகொடவெலே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அயகம பிரதேச செயலாளர் அலுவலகம் 34,865.95 ரூபாவையும் பேருவலை நகர சபை 131,200 ரூபாவையும் திரு.எச்.ஏ.ஆரியதாச 25,447.96 ரூபாவையும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் வை.டீ.சித்ரசிறி 81,315 ரூபாவையும் செல்வி நிசினி மொவின்யா குருகே 5,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,448,833,919.15 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Share This Post