‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 151 கோடியை தாண்டியுள்ளது

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 151 கோடியை தாண்டியுள்ளது

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1511 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் அரச ஊழியர்கள் 17,504,709.35 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். குறித்த அன்பளிப்பு சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

திரு.டப்ளியு.ஏ.உபாலி பிரேமதிலக்க 100,000 ரூபாவையும் திருமதி ஜே.லலிதா ரொபின்ஷன் 10,000 ரூபாவையும் ஹொனஸ் பிரதர்ஸ் மற்றும் திரு.லலந்த 5,000 ரூபாவையும் திருமதி.கனத்தேகெதர எலிசா 10,000 ரூபாவையும் திரு.பி.எம்.ரத்னநாயக்க 10,000 ரூபாவையும் திரு.டி.எல்.பிரேமரத்ன 5,000 ருபாவையும் திரு.கே.சி.எஸ்.கே.பிரேமலால் 500.00 ரூபாவையும் திரு.கே.ஆர்.தனுஜ தீக்ஷன 1500 ரூபாவையும் கேகாலை மாவட்ட சாசனாரக்ஷக்க சபை 687,500 ரூபாவையும் மற்றும் மாவனல்ல தேரர் நிர்வாகக்குழு மற்றும் மாவனல்ல சாசனாரக்ஷக்க நிர்வாகக்குழுவும் 250,000 ரூபாவையும் இந்நிதியத்திற்கு வழங்கியுள்ளதுடன், குறித்த அன்பளிப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ரஷ்யாவின் Kurusk மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் பெற்றோர் 115,000 ரூபாவையும் மத்திய மாகாண சபையின் செயலாளர் உட்பட அலுவலக ஊழியர்கள் 44,500 ரூபாவையும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிலையம் 111,899,82 ரூபாவையும் பொறியியலாளர் திரு.எல்.டப்ளியு.டி.தனன்சூரிய 100,000 ரூபாவையும் மற்றும் இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் 96,696.04 ரூபாவையும் இந்நிதியத்திற்கு வழங்கியுள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,511,158,364.14 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

 

Share This Post