களனி துருத்து மகா பூஜோத்சவ இறுதி பெரஹராவின் போது புனித சின்னத்தை யானை மேல் வைத்தல் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது

களனி துருத்து மகா பூஜோத்சவ இறுதி பெரஹராவின்  போது புனித சின்னத்தை  யானை மேல் வைத்தல் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது

களனி ரஜமகா விகாரையின் துருத்து மகா பூஜோத்சவ இறுதி பெரஹரா நேற்று (22) இரவு கோலாகலமாக இடம்பெற்றது.

களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் வண.கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித்த தேரரின் ஆலோசனையின் கீழ் இடம்பெற்ற இறுதிப் பெரஹராவின்போது புனித சின்னத்தை யானை மேல் வைத்தல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் துருத்து மகா பெரஹரா வீதி பவனி இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம பஸ்நாயக்க நிலமே தம்மிக்க ஆட்டிகல, அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சர் ஹர்ஷ த சில்வா, முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW