தாமரைக் கோபுரத்தின் புதிய முகாமைத்துவ தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

தாமரைக் கோபுரத்தின் புதிய முகாமைத்துவ தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இன்று (14) தனது பணிகளை பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவத்தில் 35 வருட சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாகவும் கடமையாற்றிய திரு.சமரசிங்க, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

அவர் தாமரைக் கோபுர திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post