ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமை அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை முன்னிட்டு முழு இரவு பிரித் பாராயணம் மற்றும் சமய உரை நிகழ்வு நேற்று (26) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இந்த சமய உரை நிகழ்வில் பங்குபற்றினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதன் விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றை பதிவுசெய்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் குமார வெல்கம, டக்லஸ் தேவானந்த ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW