அம்பிடியே ஸ்ரீ ராஹுல தேரரின் தகனக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பு

மகரகம ஸ்ரீ வஜிரஞான சமயஸ்தாபனத்தின் தலைவர் மறைந்த சங்கைக்குரிய அம்பிடியே ஸ்ரீ ராஹுல நாயக தேரரின் தகனக் கிரியைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.

தகனக் கிரியைககள் இன்று (20) பிற்பகல் கொழும்பு ஹெவ்லொக் டவுன் ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அமரபுர மகா நிகாயவின் சங்கைக்குரிய மகாநாயக தேரர் கொடுகொட தம்மாவாச தேரரின் தலைமையில் நாயக தேரர்கள் அநுநாயக தேரர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற தகனக் கிரியைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

Share This Post