அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்.      – ஜனாதிபதி  

அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்.      – ஜனாதிபதி   

அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்க கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இன்று (15) தஜிகிஸ்தான், துஷன்பே நௌருஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் (CICA)  கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின், ரஷ்ய ஜனாதிபதி விலடிமிர் புடின், துருக்கி ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோர் உள்ளிட்ட ஆசியாவின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் அவர்களின் தலைமையில் இம்மாநாடு ஆரம்பமானது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி இங்கு மிகுந்த வேதனையுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலம் தெளிவாகவுள்ளது என்றும் தெரிவித்தார். உறுப்பு நாடுகள் என்ற வகையில் இந்த பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்வதற்கு எமக்கு மத்தியிலான சகோதரத்துவமும் பிணைப்பும் மிகவும் அவசியமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும் என்றும் நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்

ஆசியாவில் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பொருளாதார வர்த்தக கொள்கைகள் எப்போதும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் கொள்கைகளை பலப்படுத்த வேண்டும் என்றும்  ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார். \

ஆசியாவில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் பலப்படுத்தி அடுத்த நூற்றாண்டில் ஆசியாவை வறுமையிலிருந்து முழுமையாக விடுபட்ட ஆசியாவாக ஆக்குவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய மாநாடு CICA ஆனது, ஆசியாவில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்குடன் 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும்.

இலங்கை CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது. இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

CICA யின் உறுப்பு நாடுகளில் ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், வங்காளதேசம், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியன உள்ளடக்குகின்றன. உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த மாநாடு மிகவும் முக்கியமானது என்பதுடன், இது பற்றி ஜனாதிபதி அவர்கள் மாநாட்டில் விசேடமாக சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் (CICA)  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை.

(2019.06.15 தஜிகிஸ்தான், துஷன்பே மாநாட்டு மண்டபம்)

 உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை,

இந்த மாநாட்டிற்கு தலைமைவகிக்கும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் அவர்களே,

கௌரவ அரச தலைவர்களே,

அதிதிகளே, நண்பர்களே,

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டிற்கு (CICA) இலங்கையையும் அழைத்தமைக்காக முதலில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக ஆசிய நாடுகளின் உறுப்புரிமையைக் கொண்டுள்ள ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாடு எதிர்கால உலகிற்கு முகங்கொடுப்பதற்கான மிகச் சிறந்ததோர் அமைப்பாகும். உலகின் அடுத்த நூற்றாண்டை ஆசிய நூற்றாண்டாகவே நாம் கருதுகின்றோம். எனவே எமது ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாட்டின் மூலம் சிறந்ததோர் உலகை வெற்றிகொள்வதற்காகவும் சமாதானத்திற்காகவும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

சமாதானத்திற்கான அர்ப்பணிப்பில் எமது மத்தியிலான ஐக்கியமும் சகோதரத்துவமும் மிகப்பெரும் பலமாகும். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி நான் இங்கு மிகுந்த வேதனையுடன் நினைவுகூர்கின்றேன். அந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் உருவான அந்த சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை இன்னும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கும் எமது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலம் தெளிவாகவுள்ளது.

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநட்டின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் இந்த பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்வதற்கு எமக்கு மத்தியிலான சகோதரத்துவமும் பிணைப்பும் மிகவும் அவசியமானதாகும். ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த சக்திகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என நான் இங்கு கேட்டுக்கொள்கின்றேன். அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட ஏனைய அனைத்து துறைகளிலும் பலமாக இருக்க வேண்டுமென்று நான் நம்புகின்றேன். இவை அனைத்திற்கும் நவீன தொழிநுட்பத்தின் மூலம் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். அதேபோன்று ஜனநாயக சுதந்திர நாடுகளின் இறைமையை பாதுகாப்பதற்கு ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாடு (CICA) அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் நான் நம்புகின்றேன்.

மனித உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடுகளின் இறைமையில் தலையிட வேண்டாமென நான் குறிப்பாக கேட்டுக்கொள்கின்றேன். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும். நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பொருளாதார வர்த்தக கொள்கைகள் எப்போதும் எளிமையானதாக இருக்க வேண்டும். பேண்தகு அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உள்ள நாம் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின்   மாநாட்டின் கொள்கைகளை பலப்படுத்த வேண்டும். எனவே ஐக்கியம் என்ற பலத்துடன் ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாட்டை முன்கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை உங்கள் அனைவரிடமும் நான் வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாடு எதிர்கால சவால்களை தெளிவாக இனங்காண்பது அவசியமானதாகும். அதன் மூலம் நாம் முன்னோக்கிச் செல்வது மிகவும் இலகுவாகின்றது. இவை அனைத்திற்கும் தேவையாக இருப்பது ஐக்கியமாகும். அதேபோன்று சமாதானமும் முக்கியமானதாகும். சமாதானத்தின்மூலம் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள முடியும். இதன்போது பிராந்திய பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். பிராந்திய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பலப்படுத்துவதற்கு ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாட்டின் நோக்கங்கள் மிகவும் முக்கிமானதாகுமென்று நான் நம்புகின்றேன்.

அதேபோன்று வறுமையை ஒழிப்பதற்கும் சமாதானம் முக்கியமானதாகும் வறுமையை ஒழிப்பதற்கு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் அவசியமானதாகும். எனவே முக்கியமாக ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் மாநாட்டின் நோக்கங்களில் சமாதானமும் ஐக்கியமும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பொருளாதார நோக்கங்களை பலப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த நூற்றாண்டில் ஆசியாவை வறுமையிலிருந்து முழுமையாக விடுபட்ட ஆசியாவாக ஆக்குவதற்கு நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

Share This Post

NEW