இலங்கை கராட்டி தோ சம்மேளனத்திற்கு ஜனாதிபதி 30 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

இலங்கை கராட்டி தோ சம்மேளனத்திற்கு ஜனாதிபதி 30 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

கராட்டி விளையாட்டுக்காக  பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்காக இலங்கை கராட்டி தோ சம்மேளனத்திற்கு 30 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அச் சம்மேளனத்தின் தலைமை செயலாளர் கீர்த்தி பஸ்நாயக்கவிடம் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபாலவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்றின் பேரிலேயே இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Post

NEW