சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒருபோதும் நிதி ஏற்பாடுகளை பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

Share This Post

NEW