ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புதிய பொதுச்செயலாளரின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புதிய பொதுச்செயலாளரின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (10) முற்பகல் தனது பணிகளை ஆரம்பித்தார்.

கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இன்று முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், புதிய பொதுச்செயலாளரருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர அவர்களின் நியமனக் கடிதத்தை இதன்போது ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, லசந்த அழகியவன்ன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share This Post

NEW