ஜனாதிபதி நாளை இந்தியாவிற்கு பயணம்

ஜனாதிபதி நாளை இந்தியாவிற்கு பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாளை (28) நண்பகல் இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.…

ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Share This Post

NEW