“சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் 47ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் பாணந்துரை பின்வத்த சத்தர்மாகர பிரிவெனாவில்

“சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் 47ஆவது நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் பாணந்துரை பின்வத்த சத்தர்மாகர பிரிவெனாவில்

அனைத்து பௌர்ணமி தினங்களிலும் இலங்கையில் பிரதான விகாரை ஒன்றை மையமாகக்கொண்டு இடம்பெறும் “சதஹம் யாத்ரா” சமய உரைத் தொடரின் 47ஆவது நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாணந்துரை, பின்வத்த சத்தர்மாகர பிரிவெனாவை மையமாகக்கொண்டு இடம்பெற்றது.

இன்று முற்பகல் விகாரைக்குச்சென்ற ஜனாதிபதி அவர்கள், சமய கிரியைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து விகாராதிபதி களுத்துறை மாவட்ட சங்க சபையின் தலைவர், அமரபுர ஸ்ரீ தத்தம்மவங்ச மகா நிக்காயவின் அநுநாயக்கர் சங்கைக்குரிய தலல்லே மெத்தானந்த தேரரை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தர்ம போதனையையும் ஜனாதிபதி அவர்கள் செவிமடுத்தார்.

பன்னிப்பிட்டிய, தலவத்துகொடை ஸ்ரீ ஞானராம தியான மண்டபாதிபதி திரிப்பீடக வல்லுனர் சங்கைக்குரிய மிரகஹவத்தே பஞ்ஞாசிறி தேரரால் விசேட தர்ம உரை நிகழ்த்தப்பட்டதுடன், தேரருக்கு பிரிகரை மற்றும் புனித சின்னங்களைக் கொண்ட கோபுர சின்னமொன்று ஜனாதிபதி அவர்களால் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள், பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பிரதேச பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Share This Post

NEW