இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மொஹமட் காசிம் மொஹமட் பைஸால் மற்றும் அலி சாஹிர் மெளலானா செயிட் ஆகியோர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

அதற்கமைய, மொஹமட் காசிம் மொஹமட் பைஸால் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும் அலி சாஹிர் மெளலானா செயிட் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

Share This Post

NEW