“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்திற்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த விருது ஜனாதிபதியிடம் கையளிப்பு

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்திற்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த விருது ஜனாதிபதியிடம் கையளிப்பு

“த நியுஸ் பேப்பர்” திரைப்படம் அமெரிக்காவின் கலிபோனியாவில் இடம்பெற்ற The IndieFEST Film விருது விழாவில் விசேட பாராட்டு விருதை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த விருது சான்றிதழ் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.

இத்தாலி அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, லெபனான், சிரியா, சுவிட்சலாந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த விருது விழாவிற்கு படைப்புகளை சமர்ப்பித்திருந்தன.

விடுதலை, சமூக நீதி மற்றும் எதிர்ப்பு மனோ நிலையை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் The IndieFEST Film குழுவின் பாராட்டைப் பெற்றது. “த நியுஸ் பேப்பர்” திரைப்படம் சரத் கொத்தலாவல மற்றும் குமார, திரிமாதுர ஆகியோரின் இணை இயக்கத்தில் உருவானதாகும்.

அமைச்சர் பந்துல குணவர்தன, ரவீந்ர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் இதன் இணை தயாரிப்பாளர்கள் ஆவர்.

Share This Post