ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி ஜனாதிபதியை சந்தித்தார்

ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி ஜனாதிபதியை சந்தித்தார்

ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக வித்தியாலய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

தற்போது ரொக்கட்டின் முன்னேற்ற நிலைமை பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கப்பட்டதுடன், தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்.

கம்பஹா பண்டாரநாயக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக இடம்பெற்ற கண்காட்சியில் இந்த ரொக்கட்டை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டதுடன், இம்மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஆரம்ப கட்டமாக 10 லட்சம் ரூபாவினை கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கி வைத்தார்.

ரொக்கட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விமானப்படை தொழிநுட்ப அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், எயார் வைஸ் மார்ஷல் எம்.டீ. ரத்நாயக ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Share This Post

NEW