ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகமாக நியமனம்..…

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைய வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பேண்தகு முதன்மை உபாயமார்க்கமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் அவர்களுக்கு அரச துறையில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி பதில்கடமை இராணுவ தளபதியாக 2007ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் இந்தோனேசியாவிற்கான இலங்கை தூதுவராக அவர் 06 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் ஆரம்பகால செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராகவும் மல்லவாரச்சி பணியாற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

Share This Post