ரஷ்ய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72வது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜெனரல் ஒலேக் அவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share This Post